யோகாசனத்தின்போது சம்ஸ்கிருத ஸ்லோகம் அவசியமா? – கேரள பெண் அமைச்சர் கேள்வி.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இன்று மாநில அரசின் சார்பில் யோகாசான நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அம்மாநில சுகாதாரத்துறை மந்திரியும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.கே. ஷைலஜா, யோகாசனத்தின்போது சமஸ்கிருத ஸ்லோகம் அவசியம் தானா?, மதச்சார்பற்ற நமது நாட்டில் அவரவர் மதநம்பிக்கை அடிப்படையிலான பிரார்த்தனைகளை செய்து கொள்ளலாமே? என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
மதநம்பிக்கையில்லாத கடவுள் மறுப்பாளர்கள்கூட தங்களது மனதை ஒருநிலைப்படுத்த தனி முறைகளை கையாண்டு வரும்நிலையில் சர்வதேச யோகா தினம் போன்ற பொது நிகழ்ச்சியில் பொதுவான பிரார்த்தனைகளை செய்யலாமே என்று அவர் கருத்து கூறியதாகவும் தெரியவந்துள்ளது.
மந்திரியின் இந்த கருத்து அம்மாநில பா.ஜ.க.வினருக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. முதலில் யோகாசனத்தை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு அவர் கருத்து சொல்லியிருக்க வேண்டும் என கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் கும்மனோம் ராஜசேகர் காட்டம் காட்டியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.