கேரள விளையாட்டு மந்திரி மிரட்டுவதாக தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் புகார்.
சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை முறியடித்து இடது சாரி கூட்டணிகள் ஆட்சியை பிடித்தது. அப்போது விளையாட்டுத்துறை மந்திரியாக ஈ.பி. ஜெயராஜன் பொறுப்பேற்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் முகமது அலி காலமானது குறித்து கேட்ட கேள்விக்கு, இவர் அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தடகள வீராங்கனையை மிரட்டிய புகாரில் சிக்கியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த முன்னணி தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ். அவர் தடகள போட்டியான நீளம் தாண்டுதலில் பங்கேற்று வருகிறார். இவர் இன்று முதல் மந்திரி பினராய் விஜயனை சந்தித்து ஜெயராஜன் தன்னை மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் ‘‘ஜெயராஜன் மந்திரியாக பொறுப்பேற்றதும் எனக்கு போன் செய்தார். அப்போது, மிரட்டல் விடுத்ததுடன் என்னிடம் அவமரியாதையாக பேசினார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘‘நாங்கள் ஆட்சிக்கு வரமுடியாது என்று நினைத்தீர்களா? தற்போது, ஆட்சிக்கு வந்துள்ளோம். கொஞ்சம் பொறுத்திருந்து பார்’’ என்று மிரட்டும் தோனியில் பேசியதாக அஞ்சு கூறியதாக மலையாள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் ‘‘நாங்கள் எதிர்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய மந்திரி, அதனால் தற்போது எங்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்’’ என்றார்.
பொறுப்பேற்ற சில நாட்களிலேயே கேரள மந்திரி வரிசையாக விமர்சனத்தில் சிக்கியுள்ளார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.