Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Kerala: Victory for UDF in Vengara by poll, BJP goes  to fourth place.

By   /  October 16, 2017  /  Comments Off on Kerala: Victory for UDF in Vengara by poll, BJP goes  to fourth place.

    Print       Email

குர்தாஸ்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி: கேரள சட்டப்பேரவை தொகுதியை காங். கூட்டணி கைப்பற்றியது

 

InCorpTaxAct
Suvidha

 

 

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 1.93 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றார்.

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மக்களவை எம்.பி. வினோத் கன்னா கடந்த ஏப்ரலில் காலமானார். அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் சார்பில் சுனில் ஜாஹர், பாஜக சார்பில் ஸ்வரண் சலாரியா, ஆம் ஆத்மி சார்பில் சுரேஷ் கஜுரியா போட்டியிட்டனர். கடந்த 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாஹர் 4,99,752 வாக்குகளைப் பெற்றார். பாஜக வேட்பாளர் ஸ்வரண் சலாரியாவுக்கு 3,06,533 வாக்குகளும் ஆம் ஆத்மி வேட்பாளர் சுரேஷ் கஜுரியாவுக்கு 23,579 வாக்குகளும் கிடைத்தன. சுனில் ஜாஹர் 1.93 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

கேரளாவின் மலப்புரம் மக்களவை தொகுதி எம்.பி.யும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவருமான அகமது காலமானதை தொடர்ந்து அந்த தொகுதியில் வெங்கரா தொகுதி எம்எல்ஏ குஞ்சாலி குட்டி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து காலியான வெங்கரா சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.என்.ஏ. காதர், ஆளும் மார்க்சிஸ்ட் சார்பில் பஷீர், சமூக ஜனநாயக கட்சி சார்பில் நசீர், பாஜக சார்பில் கே.ஜனசந்திரன் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் காதர் 65,227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் பஷீர் 41,917, சமூக ஜனநாயக கட்சியின் நசீர் 8,648, பாஜக வேட்பாளர் ஜனநாதன் 5,728 வாக்குகளைப் பெற்றனர்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →