சிந்து, சாக்ஷி, தீபா கர்மாகர் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது – மத்திய அரசு அறிவிப்பு.
ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து, வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரர் ஜித்து ராய் உட்பட 4 பேருக்கு இந்த ஆண்டிற்கான ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக கேல் ரத்னா விருது இவர்கள் நால்வருக்கும் வழங்கப்படுகிறது.
இதுபோல துரோணாச்சாரியார், அர்ஜுனா மற்றும் தயான்சந்த் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.விருதுகளை வாங்கும் வீரர்களின் விவரம் பின்வருமாறு:
துரோணாச்சாரியார் விருது: தடகள பயிற்சியாளர் ரமேஷ், நீச்சல் போட்டி பயிற்சியாளர் பிரதீப் குமார், குத்துச்சண்டை பயிற்சியாளர் சாகர்மால் தயாள், மல்யுத்த பயிற்சியாளர் மகாவீர் சிங்,கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தி.
அர்ஜுனா விருது: வில்வித்தை வீரர் ராஜத் சவ்கான், தடகள வீராங்கனை லலிதா பாபர், மாற்றுத் திறனாளி தடகள வீரர் சந்தீப் சிங் மான், கிரிக்கெட் வீரர் ரஹானே.
தயான்சந்த் விருது: ஹாக்கி வீரர் சில்வானாஸ், துடுப்பு படகு வீரர் ராஜேந்திரா, தடகள வீராங்கனை சாத்தி சீதா.
ஆகஸ்ட் 29-ம் தேதி குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி விருதுகளை வழங்குகிறார். ராஜீவ் கேல் ரத்னா விருது பெறுவோருக்கு ரூபாய் 7.5 லட்சமும், துரோணாச்சாரியார், அர்ஜுனா விருது பெறுவோருக்கு ரூபாய் 5 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.