Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Kill My Son – Pakistani Model Qandeel Baloch’s Father

By   /  July 23, 2016  /  Comments Off on Kill My Son – Pakistani Model Qandeel Baloch’s Father

    Print       Email

qandeel-baloch-father.jpg.image.975.568‘மகளைக் கொன்ற என்னுடைய மகனைக் கொல்லவேண்டும்.’- பாகிஸ்தான் மாடல் குவாண்டீல் பாலோச்சின் தந்தை ஆவேசம்.

பாகிஸ்தானில் செலிபிரிட்டி மாடல் அழகியாக வலம் வந்தவர் குவாண்டீல் பாலோச். இவர் கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து அவ்வப்போது சலசலப்பை உருவாக்கிவந்த பலோச்சுக்கு கடும் எதிர்ப்பலைகள் கிளம்பின.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில், ஜூலை 14-ம் தேதி, பலோச் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார், இது குறித்து விசாரித்த காவல்துறையினர். குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணன் வாசிம், பலோச்சை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது. தற்போது வாசிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குவாண்டீலின் தந்தை அன்வர் ஆசிம், சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டுக்கொல்ல வேண்டும் qandeel1-580x395என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “அவனை பார்த்தவுடன் சுட்டுக்கொல்லவேண்டும். எங்களுக்கு போதை மருந்தை கொடுத்துவிட்டு, என் கடைக்குட்டி பெண்ணை கொன்றுவிட்டான். அவளை கழுத்தை நெரித்த போது எங்களை கூப்பிட்டு இருப்பாள் எங்களுக்கு கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

-மகேந்திரன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →