Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

Kohli  asks  fans  to  call  “India”  instead  of  chanting  his  name.

By   /  March 24, 2016  /  Comments Off on Kohli  asks  fans  to  call  “India”  instead  of  chanting  his  name.

    Print       Email

www.hdnicewallpapers.com

என்னுடைய பெயரைக் கூப்பிடுவதற்கு பதில் ‘இந்தியா இந்தியா’ என்றே முழக்கமிடுங்கள்- ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்!

InCorpTaxAct
Suvidha

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசம் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது.

இறுதி பந்து வரை மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம், ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்றுவிட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இந்தப் போட்டியில் விராட் கோலி 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்த போது ரசிகர்கள் கோலி, கோலி என்று உற்சாக முழக்கமிட்டனர். அப்போது, அவர்களை நோக்கி அதிக உற்சாகத்துடன் கோஷமிடுமாறு கோலி சைகை செய்தார். மேலும் தன்னுடைய டீ-சர்ட் மேல் உள்ள இந்தியா என்ற வார்த்தையை காட்டி, தன்னுடைய பெயருக்குப் பதிலாக ‘இந்தியா இந்தியா’ என்று முழங்குமாறு அறிவுறுத்தினார்.

தன்னுடைய கையை அசைத்து, ‘இன்னும் சத்தமாக’ என்று அவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →