விராட் கோலி 4-வது சதம்: 82 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது பெங்களூர்
ஐ.பி.எல். லீக் தொடரின் 50-வது லீக் தொடர் இன்று பெங்களூரில் நடைபெற்றது. பெங்களூரில் மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. நேரம் அதிகமானதால் ஆட்டம் 15 ஓவராக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணியின் கிறிஸ் கெய்ல், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் 3 ஓவரில் பெங்களூர் அணி 17 ரன்கள்தான் எடுத்திருந்தனர். 4-வது ஓவரை அபாட் வீசினார். இந்த ஓவரில் கிறிஸ் கெய்ல் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அதிரடியை துவக்கி வைத்தார்.
அதன்பின் இருவரும் வாணவேடிக்கை நடத்தினார்கள். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பெங்களூர் அணி 4.4 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. விராட் கோலி 28 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் கிறிஸ் கெய்ல் 26 பந்தில் 50 ரன்னைத் தொட்டார். தொடர்ந்து விளையாடிய கெய்ல் 32 பந்தில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 73 ரன்கள் குவித்தார். கெய்ல் அவுட்டாகும்போது பெங்களூர் அணி 11 ஓவரில் 147 ரன்கள் குவித்திருந்தது.
அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 2 பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அடுத்து லோகேஷ் ராகுல் களம் இறங்கினார். விராட் கோலி 47 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சர் உடன் சதம் அடித்தார். இந்த சீசனில் விராட் கோலி அடிக்கும் 4-வது சதம் இதுவாகும். தொடர்ந்து விளையாடிய கோலி 50 பந்தில் 12 பவுண்டரி, 8 சிக்சருடன் 113 ரன்கள் குவித்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரி அடிக்க பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. ஆனால் மிக அதிகமான ரன்ரேட் அழுத்தம் காரணமாக அந்த அணி வீரர்கள் அதிரடியாக ஆட முயன்று தொடர்ச்சியாக ஆட்டமிழந்தார்கள். அதிகப்பட்சமாக சகா மட்டுமே 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். கேப்டன் விஜய் 16 ரன்கள் எடுத்து அரவிந்த் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 120 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனை அடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பெங்களூர் லெக் ஸ்பின்னர் சாஹல் 4 விக்கெட்களை வீழ்த்தினார். சதம் அடித்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.