Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Kumari ananthan faints  during protest march :  Hospitalized

By   /  February 10, 2016  /  Comments Off on Kumari ananthan faints  during protest march :  Hospitalized

    Print       Email

நடைப்பயணத்தின்போது குமரி அனந்தன் திடீர் மயக்கம். மருத்துவ மனையில் அனுமதி.18-kumari-ananthan34-600

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 25–ந்தேதி சென்னையில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றார்.

InCorpTaxAct
Suvidha

கடந்த 7–ந்தேதி அவர் நெல்லை மாவட்டத்தை அடைந்தார். பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே அவருக்கு நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி நோக்கி தனது பயணத்தை தொடங்கினார். பாளையங்கோட்டையை அடுத்த பானாங்குளத்தில் நேற்று மதியம் ஓய்வு எடுத்தார்.

48–வது நாளாக இன்று பானாங்குளத்தில் இருந்து குமரிஅனந்தன் தனது பயணத்தை தொடங்கினார். மூன்றடைப்பை நெருங்கும்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கு அவருக்கு அனைத்து மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக குமரிஅனந்தன் மயக்கம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையில் ‘மதுவிலக்கை அமல் செய்யவேண்டும் என்பதற்காக மூத்த தலைவர் குமரி அனந்தன் நடைப்பயணத்தின்போது மூர்ச்சையாகி விழுந்து மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியாவது தமிழக முதல்வர் ஜெயலலிதா மதுவிலக்கைத் தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும்’ என்று விடுதலைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →