Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Kushboo  says  she will  contest if  party  says

By   /  March 2, 2016  /  Comments Off on Kushboo  says  she will  contest if  party  says

    Print       Email

Kushbooசட்டமன்றத் தேர்தலில் கட்சி சொன்னால் போட்டியிடுவேன். – குஷ்பு அறிவிப்பு.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு இன்று ([புதன்கிழமை) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

InCorpTaxAct
Suvidha

கேள்வி: கூட்டணி தொடர்பாக விஜயகாந்திடம் காங்கிரஸ் தலைவர்கள் யாராவது பேச வாய்ப்புள்ளதா?

பதில்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்துள்ளோம். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற முறையில் இளங்கோவன் உங்களுக்கு பதில் அளிப்பார்.

கேள்வி: தேமுதிக அல்லாமல் வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா?

பதில்: இதுகுறித்து டெல்லி மேலிடத்தில் பேசிவிட்டுத்தான் பதில் சொல்ல முடியும்.

கேள்வி: கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற அவையை முடக்கியுள்ளார்களே?

பதில்: இருக்கிற பிரச்சனைகளை திசைத்திருப்ப என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு குறித்து பதில் அறிக்கை கொடுக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. புதிதாக இதனை கையில் எடுத்து பிரச்சனை செய்வது கேலியாக உள்ளது.

கேள்வி: தேர்தல் வரும் நேரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?

பதில்: பாஜக, அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை மக்கள் சுமத்தியுள்ளனர். இந்த நேரத்தில் இதனை (கார்த்தி சிதம்பரம் விவகாரம்) பேசி பெரியதாக்க நினைக்கிறார்கள். எந்த தவறும் செய்யவில்லை என்று கார்த்தியே சொல்லிவிட்டார்.

கேள்வி: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

பதில்: தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. கட்சிப் பணியாற்றவே காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். கட்சி விருப்பப்பட்டால் நான் போட்டியிடுவேன்.

கேள்வி: நேஷனல் ஹெரால்டு வழக்கு, 2ஜி வழக்கு போன்றவை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்களால் காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா?

பதில்: அதிமுகவினர் ஒரு குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு பேனர் அடிப்பாங்க. போஸ்டர் அடிப்பாங்க. ஆனால் படித்த மக்களுக்கு தெரியும். இது எந்த அளவுக்கு உண்மை. பொய் என்று. வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. யாரும் பின்வாங்கவில்லை. போராடிக்கொண்டிருக்கிறார்கள். கோர்ட்டில் வாதாடிக்கொண்டிருக்கிறார்கள். யாரும் தப்பித்து ஓடவேண்டும் என்று நினைக்கவில்லை.

லலித்மோடி மாதிரி அவர்களை நாட்டுவிட்டு அனுப்பவில்லை. வியாபம் வழக்கு குறித்து பாஜக இதுவரை ஒன்றும் சொல்லவில்லை. வசுந்தரா ராஜே, லலித்மோடி ஆகியோர் மீது எந்த அளவுக்கு குற்றச்சாட்டு வந்துள்ளது. அதைப்பற்றி அவர்கள் பேசவில்லை. சுஷ்மா சுவராஜ் உதவி செய்து லலித் மோடியை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார். அதைப்பற்றி அவர்கள் பேசவில்லை. தவறு நடந்திருக்கிறது. அதனால் தான் திட்டமிட்டு லலித்மோடியை அவர்கள் வெளியே அனுப்பியுள்ளனர் என்றார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →