Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Lalu Prasad turns 69 : Sonia, Rahul,Nitish & Arun Jaitly greets him.

By   /  June 11, 2016  /  Comments Off on Lalu Prasad turns 69 : Sonia, Rahul,Nitish & Arun Jaitly greets him.

    Print       Email

லாலுவுக்கு 69 வது பிறந்த நாள். சோனியா, ராகுல், நிதிஷ்குமார் வாழ்த்து.lalu-prasad-yadav

பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ் 69 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். லல்லுவை வாழ்த்த ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவரது இல்லத்தில் குவிந்திருந்த வேளையில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், யோகாசன குரு பாபா ராம்தேவ் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

InCorpTaxAct
Suvidha

மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்து கடுமையான போராட்டத்துக்கு இடையில் அரசியலில் இவ்வளவு பெரியநிலையை எட்டியுள்ள லல்லுவின் வாழ்க்கை ஆச்சரியப்பட வைப்பதாக குறிப்பிட்ட நிதிஷ்குமார், அரசியலில் அவர் இன்னும் உயர்வான நிலையை அடைய வேண்டும் என இறைவனை வேண்டுவதாக குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரி அருண் ஜெட்லி, பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

லல்லுவின் பிறந்தநாளையொட்டி, பீகார் மாநில தலைநகர் பாட்னா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகளுக்கு ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

–அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →