Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Lanka needs to do more on reconciliation work – UN Chief says.

By   /  September 2, 2016  /  Comments Off on Lanka needs to do more on reconciliation work – UN Chief says.

    Print       Email

மறுகட்டமைப்பு சீர்திருத்தப் பணிகளில் இலங்கை இன்னமும் அதிகமாகச் செய்ய வேண்டும் – ஐநா சபைத் தலைவர் பான் கீ un-chief-condemns-deadly-terrorist-attack-at-turkeys-airport-bc8c9ee4d57234e73ff2143fd27a7d5aமூன் பேச்சு.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ள ஐ.நா சபை தலைவரான பான் கி மூன், உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மறுகட்டமைப்பு சீர்த்திருத்த பணிகளில் அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் இன்னும் நிறைய பணிகளை செய்ய வேண்டும் என்று அங்கு நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடந்த உள்நாட்டு போரினால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு ராஜபக்சேவிற்கு பிறகு பொறுப்பேற்ற மைத்ரிபால சீறிசேனா தலைமையிலான அரசு அங்கு மேற்கொள்ளும் நல்லிணக்கம் மற்றும் சீர்த்திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் வரவேற்கும் விதமாக உள்ளது.

இங்கு வாழும் சமூகங்களை இணைக்கும் வகையில், இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட இலங்கை சுதந்திர தினத்தின் போது சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் அந்நாட்டு தேசிய கீதம் பாடப்பட்டது 1950-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

இலங்கை அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள், அங்கு மீண்டும் அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிக்கு நம்பிக்கையையும், வலிமையையும் தருகின்றது.

இலங்கை அரசுக்கு இனம், மதம், மற்றும் அரசியல் ரீதியாக வேறுபாடு கருதாமல் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வது முக்கியமான விஷயமாகும்.

ராணுவம் மற்றும் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை அந்தந்த மக்களுக்கு திரும்ப ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் ராணுவ நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டால் அங்கு பதற்றம் குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →