Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Leaders  arriving from Delhi to discuss seat sharing with DMK – says E.V.K.S Elangovan.

By   /  March 22, 2016  /  Comments Off on Leaders  arriving from Delhi to discuss seat sharing with DMK – says E.V.K.S Elangovan.

    Print       Email

d8afc82d-e327-4b88-9b43-f67f6bf0288b_S_secvpfதொகுதி பங்கீடு பற்றி திமுகவுடன் பேச டெல்லி தலைவர்கள் சென்னை வருகிறார்கள். ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிப்பு.

தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் அம்பேத்கரின் 125–வது பிறந்த நாளை யொட்டி அவரது ரதயாத்திரை தமிழ்நாடு முழுவதும் நடத்தபடுகிறது. இந்த ரதம் அம்பேத்கர் சிலையுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

InCorpTaxAct
Suvidha

ரதயாத்திரையின் தொடக்கவிழா இன்று சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. எஸ்.சி. துறை தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். அகில இந்திய எஸ்.சி. துறை ராஜு, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

காங்கிரஸ் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழு இன்று பிற்பகலில் கூடுகிறது. சோனியாகாந்தி அறிவுரையின் பேரில் டெல்லியில் இருந்து முகுல் வாஸ்னிக், குலாம்நபி ஆசாத் ஆகியோர் 2 நாளில் சென்னை வருகிறார்கள்.

தி.மு.க. தலைவர் கலைஞரின் வசதிக்கு ஏற்ப அவரை சந்தித்து தொகுதி எண்ணிக்கை குறித்து பேச முடிவு செய்வார்கள். இன்னும் 10 நாட்களில் காங்கிரஸ் பிரசாரம் தொடங்க இருக்கிறது.

அதன் ஒரு கட்டமாகத்தான் தலித்துகளின் ஆதரவை பெறுவதற்காக அம்பேத்கரின் ரதயாத்திரையை இன்று தொடங்கி இருக்கிறோம். இந்த ரதயாத்திரை தமிழ்நாடு முழுவதும் செல்லும்.

கலைஞர் விஜயகாந்த் மீது வைத்துள்ள நம்பிக்கை தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். தே.மு.தி.க. வராவிட்டாலும் தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி வெல்லும்.

வைகோ தி.மு.க. கூட்டணி பற்றி விமர்சித்து வருகிறார். அந்த கூட்டணியில் 4 தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காகதான் ஏதாவது பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதல்வர் வேட்பாளரை அறிவித்ததும் அந்த கூட்டணி உடையும்.

தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி இலங்கை தமிழர்களின் ரத்தத்தில் உருவானது என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை வரலாறு தெரியாமல் பேசி இருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் என்னவெல்லாம் செய்தது என்பதை அவரது தந்தையிடம் கேட்டு தெரிந்துவிட்டு பேசுவது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →