Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Legendary artist Sayed Haider Raza dies in Delhi.

By   /  July 24, 2016  /  Comments Off on Legendary artist Sayed Haider Raza dies in Delhi.

    Print       Email

sh-razaபுகழ்பெற்ற ஓவியர் ஹைதர் ரஸா மரணம் – பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் இரங்கல்

இந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் சையீது ஹைதர் ரஸா. இவர் 1922-ம் ஆண்டு பிரிட்டீசார் ஆட்சி காலத்தில் இந்தியாவின் மத்திய மாகாணத்தில் உள்ள பெரட் பகுதியில் பிறந்தார். 1950-ம் ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் குடியேறினார். இருப்பினும் இந்தியாவோடு தனது உறவை பேணி பாதுகாத்து வந்தார்.

InCorpTaxAct
Suvidha

இந்திய அரசு இவரது திறமைக்காக பத்ம விருதுகள் அனைத்தையும் வழங்கி கௌரவித்துள்ளது. பிரெஞ்சு அரசின் உயர்ந்த விருதும் கடந்த ஆண்டு ரஸாவிற்கு வழங்கப்பட்டது. 1959-ம் ஆண்டு பிரெஞ்சு ஓவியர் ஜனின் மொன்கிலாட்டை மணந்து கொண்டார். 2002-ம் ஆம் ஆண்டு அவரது மனைவி இறந்த பிறகு மீண்டும் இந்தியா வந்தடைந்தார்.

இந்நிலையில், புகழ்பெற்ற ஓவியர் சையீது ஹைதர் ரஸா நேற்று காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரது உயிர் நேற்று பிரிந்தது. ரஸாவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரணாப் முகர்ஜி தனது இரங்கல் செய்தியில், “இந்த தேசம் உயர்ந்த படைப்பாளியை இழந்துள்ளது. அவரது மறைவு உலக கலைஞர்கள் மத்தியில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கலைத்துறை என்றும் மறக்க முடியாத அளவிற்கு பங்களிப்பை செலுத்திய ரஸாவின் மறைவு தன்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஓவியர் ரஸாவின் மறைவு நமது நாட்டிற்கும் உலக கலைத் துறைக்கும், மிகப்பெரிய இழப்பு என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற ஓவியர் ஹைதர் ரஸா மரணம் – பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் இரங்கல்

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →