Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Local elections should be conducted in time – says Stalin.

By   /  March 9, 2017  /  Comments Off on Local elections should be conducted in time – says Stalin.

    Print       Email

mk-stalin-photo-21குறிப்பிட்ட தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்.

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

InCorpTaxAct
Suvidha

“குற்றவாளி”யின் “பினாமி” அரசாக செயல் பட்டு, மாநில அளவிலான நிர்வாகத்தை முற்றிலுமாக சீரழித்து விட்ட அ.தி.மு.க. அரசு, உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மனமில்லாமல் இப்போது உள்ளாட்சி நிர்வாகத்தையும் உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க. அரசு, உள்ளாட்சித் தேர்தலை எப்படி தள்ளிப் போடலாம் என்பதிலேயே தீவிரக் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. கடந்த 4.10.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது.

குறிப்பாக “31.12.2016-க் குள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடித்து விட வேண்டும்” என்றும் “அது வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும்” என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையொட்டி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற்கும், அவர்களின் பதவியை மேலும் நீட்டிப்பதற்கும் அதீத ஆர்வம் காட்டிய அ.தி.மு.க. அரசு, தேர்தலை நடத்துவதற்கு முன்வர வில்லை. அதற்கு பதில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமே மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டை நீதிபதிகள் நூட்டி ராம் மோகனராவ், சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதி மன்ற டிவி‌ஷன் பெஞ்ச் 21.2.2017 அன்று நிராகரித்து, “தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது” என்றும், “14.5.2017க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்து விட வேண்டும்” என்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

அது தவிர “மாநில தேர்தல் ஆணையம் கேட்கும் உதவிகளை, ஊழியர்களை கொடுத்து மாநில அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்திட உதவிட வேண்டும்” என்றும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த தீர்ப்பையும் மதித்து இதுவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மாநில தேர்தல் ஆணையம் எடுக்காமல் அமைதிகாக்கிறது.

எந்த தேதியில் தேர்தலை நடத்தலாம் என்பதில் மாநில தேர்தல் ஆணையம் அவ்வளவு பெரிய போராட்டத்தை வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு நடத்தியிருப்பதிலிருந்தே “உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உள்ள அலட்சிய மனப்பான்மை” வெளிப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இரு நீதிபதிகள் அடங்கிய டிவி‌ஷன் பெஞ்ச் “14.5.2017க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும்” என்று அளித்த தீர்ப்பின் மீதும் தொடர் நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் மாநிலத் தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

ஆனாலும் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் கூட மாநில தேர்தல் ஆணையமோ, குற்றவாளியின் “பினாமி” அரசோ ஈடுபடவில்லை

ஆனால் “குற்றவாளி” பினாமி ஆட்சியின் சொல் கேட்டு நடக்கும் இந்த மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தயக்கம் காட்டி வருவது, ஜனநாயக நீரோட்டத்தை தடுக்கும் அரசியல் சட்ட விரோதச் செயலாகவே பார்க்க முடிகிறது. அ.தி.மு.க. விற்குள் நடக்கும் உள்கட்சி சண்டையில் யாருக்கு சின்னம் ஒதுக்குவது? சின்னம் ஒதுக்குவதற்கு யார் கொடுக்கும் கடிதத்தை ஏற்றுக் கொள்வது? அதிமுக பிளவு பட்டு நிற்பதால் இந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாமா? என்பதெல்லாம் மாநில தேர்தல் ஆணையரின் கவலையாக இருக்கலாமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்திருக்கிறது என்பதை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புரிந்து கொள்ள வேண்டும்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆகவே உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயக தீபத்தை ஏற்றி வைத்து, கிராம சபைகளை வலுவாக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே மாநில தேர்தல் ஆணையத்திற்கு உள்ள தலையாய அரசியல் சட்ட கடமை என்பதை மாநில தேர்தல் ஆணையர் உணர்ந்து, உயர்நீதிமன்றம் அறிவித்த கெடுவிற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை உடனடியாக துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது போன்ற அரசியல் சட்ட கடமைகளை நிறைவேற்றுவதிலாவது, சிறையில் இருக்கும் “குற்றவாளி”யின் வழிகாட்டுதலின் படி செயல்படாமல், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக மதித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன் வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →