Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

M.K.Stalin and other suspended DMK MLAs staged Dharna.

By   /  August 18, 2016  /  Comments Off on M.K.Stalin and other suspended DMK MLAs staged Dharna.

    Print       Email

201608181419411259_MK-Stalin-interview-Speaker-function-dictatorial-attitude_SECVPF‘சபாநாயகர் ஒரு சர்வாதிகாரியைப் போல் செயல்படுகிறார்’. தர்ணாவில் ஈடுபட்ட ஸ்டாலின் பேட்டி.

சட்டசபை முன்பு சுமார் 1 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டு இருந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

InCorpTaxAct
Suvidha

சட்டசபையில் நேற்று தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை குண்டுகட்டாக சபாநாகர் வெளியேற்ற உத்தரவிட்டதோடு 1 வாரம் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று தீர்ப்பு வழங்கினார். இது அனைவருக்கும் தெரியும்.

நேற்றைய சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை உள்ளே சென்று சபாநாயகரிடம் சஸ்பெண்டு உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டு இருக்கிறார்கள். காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்று சஸ்பெண்டு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினர்.

ஆனால் சபாநாயகர் இவர்கள் கோரிக்கையை நிராகரித்து ஆணவத்துடன் சஸ்பெண்டு உத்தரவை திரும்ப பெற முடியாது என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல வேண்டுமானால் நீங்களும் வெளிநடப்பு செய்யுங்கள் என்று கூறி இருக்கிறார். எனவே சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து இன்று அவையில் பங்கேற்ற எங்களது எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

சபாநாயகர் தீர்ப்பு பேரவை விதிக்கு மாறாக அமைந்துள்ளது. 17-8-16 முதல் 1 வாரத்துக்கு பேரவை பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யும் வகையில் அவரது தீர்ப்பு உள்ளது. இதனால் சட்டபேரவையில் உள்ள நூல் நிலையத்திற்கோ, தலைமை செயலகத்தில் உள்ள அதிகாரிகள் அறைக்கோ, அமைச்சர் அந்தஸ்து அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகமான எனது அறைக்கோ, நானோ, எங்களது எம்.எல்.ஏ.க்களோ உள்ளே வரக்கூடாது என்று கூறி காவலர்கள் கேட்டை இழுத்து பூட்டி இருக்கிறார்கள்.

இன்று காலையில் எனது அறைக்கு வந்து இருந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் வெளியே அனுப்பி கதவை பூட்டி இருக்கிறார்கள். சபாநாயகரின் இந்த சர்வாதிகார போக்கு கண்டிக்கதக்கது. இதை கண்டிக்கும் வகையில் நாங்கள் இன்று அடையாள தர்ணா போராட்டம் நடத்தினோம்.

கேள்வி:- தி.மு.க. உறுப்பினர்கள் கேலி-கிண்டல் செய்வதாக சபாநாயகர் பதிவு செய்துள்ளாரே?

பதில்:- சபாநாயகர் அவரது இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் சொல்கிறார். சபையில் ஆளும் கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எங்களுக்கு பதில் சொல்ல வாய்ப்பு கொடுப்பது இல்லை.

இதுவரை கவர்னர் உரை, நிதி நிலை உரை ஆகியவற்றில் நாங்கள் முழுமையாக, பொறுமையாக கலந்து கொண்டுள்ளோம். சட்டசபையை புறக்கணிக்காமல் தினசரி வருகிறோம்.

ஆனால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எங்கள் உறுப்பினர்களை சீண்டு வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் பேசுகிறார்கள். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கிறார். நாங்கள் சொல்வதை நீக்கி விடுகிறார்.

அதனால் தான் பாராளுமன்றத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்வது போல் சட்டசபை நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். எங்களது தேர்தல் அறிக்கையிலும் இதை கூறி இருக்கிறோம். சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்தால்தான் உண்மை எல்லோருக்கும் தெரியும். யார் தவறு செய்கிறார்கள், விதண்டாவிதமாக யார் பேசுகிறார்கள் என்பது வெளியே தெரியும். ஆனால் அதை செய்ய இந்த அரசு தயங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கூறியதாவது:-

சபாநாயகருக்கு சட்டமே தெரியவில்லை. கோட்டை முழுவதும் தனது ஆதிக்கம் என்று சபாநாயகர் நினைக்கிறார். கோட்டையில் 2 பகுதிகள் அடங்கியுள்ளன. ஒன்று ஜூடிசியல் மற்றொன்று சட்டமன்றம்.

தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகங்கள் இங்கு தான் உள்ளன. எனவே கோட்டைக்கு வருபவர்களை தடுக்க சபாநாயருக்கு அதிகாரம் இல்லை. எது சட்டசபைக்கு உட்பட்ட பகுதி, எது சட்டசபைக்கு உட்படாத பகுதி என்று தெரியாமல் உள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் தொகுதி பிரச்சினை பற்றி அதிகாரிகளை சந்தித்து முறையிட வழி இல்லாமல் செய்கிறார். என்னையும் உள்ளே செல்ல விடாமல் தடுத்த காரணத்தால் சட்டசபையில் நான் பங்கேற்கும் போது சபாநாயகர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →