Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Made in jail food marks record sale……

By   /  November 5, 2017  /  Comments Off on Made in jail food marks record sale……

    Print       Email

‘மேட் இன் ஜெயில்’ உணவுகள்: அரசுக்கு வருமானத்தை அள்ளித்தரும் கைதிகளின் கைவண்ணம்

InCorpTaxAct
Suvidha

 

 

 

கேரளாவில் திருவனந்தபுரம், திரிச்சூர் மற்றும் கன்னூரில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. இந்த சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளைக்கொண்டு உணவுப்பொருட்களை தயாரித்து சிறை நிர்வாகம் ஸ்டால்கள் அமைத்து மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது.

சிறைக்கைதிகள் தயாரிக்கும் பிரியாணி, சப்பாத்தி மற்றும் சிக்கன் கறி ஆகியவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. குறைந்த விலையில் தரமான உணவுகள் கிடைப்பதால் சிறை அங்காடிகளுக்கு மக்கள் படையெடுக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் இம்மாதம் வரையில் சுமார் 3 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

கைதிகள் தயாரிக்கும் உணவுகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தலசேரி சிறையில் தொடங்கப்பட்ட உணவகத்தில் தினசரி வருமானம் 75 ஆயிரம் ரூபாய் அளவுக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் கன்னூர் சிறை 8.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

உணவு தயாரிப்பில் ஈடுபடும் கைதிகளுக்கு தினசரி அதிகபட்சமாக 200 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. சிறையில் மற்ற வேலைகள் செய்வபர் 118 ரூபாய் மட்டுமே ஊதியமாக பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →