Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Make Pudhucherry clean and prosperous: kiran Bedi

By   /  July 11, 2016  /  Comments Off on Make Pudhucherry clean and prosperous: kiran Bedi

    Print       Email

DrKiranBediஆட்சியாளர்களுடன் மோதல் போக்கா? என்பதற்கு கவர்னர் கிரண்பெடி பதில் அளித்தார்.

புதுவை நகர் பகுதியில் வாரந்தோறும் கவர்னர் கிரண்பெடி சுகாதாரப் பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார். நேற்று குரும்பாப்பேட் குப்பை சேகரிக்கும் கிடங்கில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி மற்றும் அதிகாரிகளுடன் சென்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–

InCorpTaxAct
Suvidha

குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் வருகிற 18–ந் தேதி முதல் அமலுக்கு வரும். எனவே பொதுமக்கள் குப்பைகளை இருவகையாக பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்கவேண்டும்.

இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு எந்திரங்கள் மூலம் மறுசுழற்சி செய்யப்படும்.

இங்குள்ள குப்பைக் கிடங்கிற்கு எதிராக இப்பகுதி மக்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது
குறித்து சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கும், எனக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருப்பதாக கூறுவதில் உண்மை ஏதும் இல்லை. நாங்கள் ஒருங்கிணைந்தே செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி துலுக்காணத்தம்மன் நகருக்கு வந்தார். அங்கு பொதுமக்களுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டார். துப்புரவு பணியில் ஈடுபட்ட ஊழியர்களையும் அவர் கவுரவித்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →