Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Makkal DMDK 25,000 party man joins DMK in front of M.K.Stalin

By   /  July 18, 2016  /  Comments Off on Makkal DMDK 25,000 party man joins DMK in front of M.K.Stalin

    Print       Email

201607180745166213_MK-Stalin-presence-of-makkal-DMDK-25-thousands-of-people_SECVPFமு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் தே.மு.தி.க.வினர் 25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

கடந்த சட்டசபை தேர்தலின்போது, மக்கள்நல கூட்டணியுடன் இணைந்து தே.மு.தி.க. தேர்தலை சந்தித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க.வுடன் கூட்டணி சேர வலியுறுத்தியும் அந்த கட்சியின் அப்போதைய எம்.எல். ஏ.க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் தலைமையில் மக்கள் தே.மு.தி.க. தொடங்கப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியை மக்கள் தே.மு.தி.க. நிர்வாகிகள் சந்திரகுமார் தலைமையில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் மக்கள் தே.மு.தி.க.வை தி.மு.க.வுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து இதற்கான இணைப்பு விழா பொதுக்கூட்டம் சேலத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தி.மு.க.வுடன் மக்கள் தே.மு.தி.க. இணைப்பு விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், பி.எச்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வி.சி.சந்திரகுமார் பேசும்போது, ‘தமிழகம் முழுவதும் மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த 25 ஆயிரம் பேர் இன்றைய தினம் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். தே.மு. தி.க.வில் உள்ளவர்களை தி.மு.க.விற்கு அழைப்பது எனது உரிமை’ என்று குறிப்பிட்டார்.

இதில் தி.மு.க. பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தி.மு.க.வில் இணைந்த மக்கள் தே.மு.தி.க. வினரை வரவேற்று பேசினார்.

முன்னதாக மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், பி.எச்.சேகர், சம்பத்குமார் மற்றும் வேலூர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் விஸ்வநாதன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில பஞ்சாலை பிரிவு துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில துணை பொதுச்செயலாளர் தேனி முருகேசன் உள்பட சேலம், ஈரோடு, கோவை, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்பட தமிழகம் முழுவதும் மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். கட்சியில் புதிதாக இணைந்த நிர்வாகிகள், தொண்டர்களை மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்து கொண்டதற்கான உறுப்பினர் படிவங்களை மு.க.ஸ்டாலினிடம் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் வழங்கினார்கள். அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →