Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Makkal Nala Koottani Leaders greets Vijayakanth on his Birth day.

By   /  August 25, 2016  /  Comments Off on Makkal Nala Koottani Leaders greets Vijayakanth on his Birth day.

    Print       Email

201608251152062274_Birth-ceremony-for-Vijayakanth-political-leaders-greet_SECVPFவைகோ, திருமாவளவன்,முத்தரசன் ஆகியோர் நேரில் சென்று விஜயகாந்திற்குப் பிறந்தநாள் வாழ்த்து. உள்ளாட்சித் தேர்தல் பற்றி விஜயகாந்த் பிடிகொடுத்துப் பேசவில்லை என்று தகவல்.

விஜயகாந்துக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிறகு மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

InCorpTaxAct
Suvidha

கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் விஜயகாந்துக்கு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தோம். அவர் நிடூழி வாழ வாழ்த்துகிறோம்.

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டு இயக்கம் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்போம். ஏற்கனவே எடுக்கப்பட்ட இந்த முடிவின் படி மாவட்டம் தோறும் பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு வைகோ கூறினார்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விஜயகாந்துக்கு நட்பின் அடிப்படையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தோம்.

உள்ளாட்சி தேர்தல் பற்றி விஜயகாந்திடம் தற்போது எதுவும் பேசவில்லை. மக்கள் நலக்கூட்டணியுடன் தே.மு.தி.க. சேர்ந்து போட்டியிடுவது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அதனால் அதுபற்றி இப்போது கருத்து எதுவும் சொல்ல முடியாது.

சட்டசபையில் மக்கள் பிரச்சனை பற்றி பேசாமல் காலத்தை வீணடித்து வருவது வேதனை அளிக்கிறது. 79 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருப்பது அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →