Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘Makkal Nala Koottani’ will not last long even for 30 days- says BJP’s H.Raja.

By   /  March 18, 2016  /  Comments Off on ‘Makkal Nala Koottani’ will not last long even for 30 days- says BJP’s H.Raja.

    Print       Email

45326885மக்கள் நலக்கூட்டணி 30 நாட்களுக்குக் கூட தாக்குப்பிடிக்காது – எச்.ராஜா கூறுகிறார்.

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

InCorpTaxAct
Suvidha

மக்கள் நலக்கூட்டணி என்பது மக்கள் விரோத கூட்டணி. தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் உள்ளன. ஆனால் 30 நாட்களுக்கு மேல் அந்த கூட்டணி நீடிக்காது.

வைகோ அந்த கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால் உடைவது உறுதி. ஏனென்றால் அவர் நிலையற்ற தன்மை கொண்ட தலைவர். நிச்சயமாக தேர்தலின் போது அந்த கூட்டணி இருக்காது.

கம்யூனிஸ்டு என்றால் நாட்டுக்கு எதிரான தீய சக்தி, வன்முறையில் ஈடுபடும் கட்சி என்றுதான் அர்த்தம்.

கம்யூனிஸ்டுகள் அதிகமாக உள்ள மாநிலங்களில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. எக்காரணத்தை கொண்டும் அந்த கட்சியோடு பா.ஜனதா ஒரு காலத்திலும் கூட்டணி அமைக்காது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்துதான் சமூக நல்லிணக்கம் தொடங்கியது. அந்த வகையில் நாம் பெருமைப்பட வேண்டும்.

பா.ஜனதா கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிக்காமலேயே தேர்தலை சந்திப்போம். பல மாநிலங்களில் அது போல் சந்தித்து வெற்றியும் பெற்று இருக்கிறோம்.

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை இன்னும் 10 நாட்களில் தயாராகி விடும். அதில் மதுவிலக்கு முக்கியமாக இடம்பெற்றிருக்கும். மது விலக்கை அமல்படுத்தும் போது வருமானத்திற்கான மாற்று வழிமுறைகளும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →