மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்பு ;நிதிஷ் குமார், அர்விந்த் கேஜ்ரிவால், கனிமொழி பங்கேற்பு
கொல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிவப்பு சாலையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், மம்தாவுக்கு மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதையடுத்து 41 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்.
இதுகுறித்து மம்தா நேற்று கூறும்போது, “ஆளுநர் கேசரி நாத் திரிபாதியை சந்தித்து, என்னுடன் சேர்த்து 42 அமைச்சர்களின் பட்டியலை வழங்கினேன். இலாகா விவரம் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதுதவிர, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் கள், பிற மாநில அமைச்சர்கள், தொழிலதிபர்கள், திரைத் துறை பிரபலங்கள் பங்கேற் கின்றனர். எனினும் காங்கிரஸ் கட்சியினர் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பூட்டான் பிரதமரும் தனது வருகையை உறுதி செய்திருப்ப தாகக் கூறப்படுகிறது. மொத்தம் சுமார் 20 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சி யில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவை யொட்டி கொல்கத்தா நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், 211 தொகுதிகளில் மம்தா தலைமையி லான திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.