பிரதமர் மோடியை பேஸ்புக்கில் தவறாகச் சித்தரித்துப் படம் போட்டவர் கைது.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமத் மெகபூப் (25). நகைக்கடை ஊழியரான இவர் தனது பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பிரதமர் மோடியை அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அக்பருதின் உவைசி மற்றும் ஒரு தெலுங்கானா எம்.எல்.ஏ. ஆகியோரது காலில் விழுவது போல் சித்தரித்து இருந்தார்.
இந்த காட்சி இது கொப்பல் மாவட்டம் முழுவதும் பரவியது. இதைப்பார்த்த பா.ஜனதா கட்சியினர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமத் மெகபூப்பை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோன்ற காட்சியை அவராக சித்தரித்தாரா? அல்லது வேறு யாரும் உருவாக்கி கொடுத்தார்களா என்று விசாரணை நடத்தினார்கள். பிரதமர் மோடியை தவறாக சித்தரித்ததற்கு பா.ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.