Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Man loses wife as stake in IPL gambling

By   /  May 29, 2016  /  Comments Off on Man loses wife as stake in IPL gambling

    Print       Email

Indian_Premier_League_logoஐ.பி.எல். சூதாட்டத்தில் மனைவியை இழந்த கணவன்; போலீஸ் விசாரணை.

உத்தரப் பிரதேசத்தின் கோவிந்த் நகரை சேர்ந்த ஒருவர் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட பணம் இல்லாததால் மகாபாரத பாணியில் மனைவியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சூதாட்டத்தில் அவர் தோற்றுவிட்டார். இதனை அடுத்து அவருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வென்றவர்கள், அந்த பெண்ணை போன் மூலம் தொடர்புக்கொண்டும், நேரில் சந்தித்தும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

InCorpTaxAct
Suvidha

பிரச்சனையை உணர்ந்துக்கொண்ட அந்த பெண் காவல்நிலையைத்தை அணுகியுள்ளார். தற்போது உள்ளூர் போலீசார் அந்த பெண்ணின் கணவன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணின் கணவன் தொடர்ந்து பல ஆண்டுகளாக சூதாட்டங்களில் ஈடுப்பட்டு சொத்து அனைத்தையும் இழந்துவிட்டதாகவும், குடித்துவிட்டு வந்து மனைவியை அடிக்கும் பழக்கம் கொண்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →