Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Man walks with wife’s body on shoulder for 10km; Odisha government orders probe

By   /  August 26, 2016  /  Comments Off on Man walks with wife’s body on shoulder for 10km; Odisha government orders probe

    Print       Email

odisha-man-with-carrying-wife-body_650x400_41472118289ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மனைவியை தோளில் சுமந்து சென்ற விவகாரம்: அதிகாரிகள் விளக்கம்

ஒடிசா மாநிலத்தின் பின் தங்கிய மாவட்டமான காளஹந்தியை சேர்ந்த மஜ்ஹி என்பவரது 42 வயதுடைய மனைவி அமங் தேய் காசநோய் தாக்கி மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தார்.

InCorpTaxAct
Suvidha

பின்னர் மஜ்ஹி தனது மனைவி சடலத்தை ஒரு போர்வையால் மூடி தோளில் சுமந்து கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 12 வயதுமிக்க அவரது மகள் அந்த மனிதருடன் நடந்து சென்றார். மருத்துவமனையில் இருந்து அவரது வீடு சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்த பின்னர் தொலைக்காட்சி குழு ஒன்று அவரை அணுகி விசாரித்துள்ளது. அப்போது, “நான் மிகவும் ஏழை மனிதன் என்றும் என்னால் இறந்த மனைவியை கொண்டு செல்ல வாகனம் ஏற்பாடு செய்ய முடியாது என்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறினேன். எந்த உதவியும் செய்ய முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர்” என்று மஜ்ஹி அவர்களிடம் தெரிவித்தார்.

உடனடியாக அந்த தொலைக்காட்சி குழுவினர் மாவட்ட கலெக்டரை தொடர்ந்து கொண்டு மீதமுள்ள 50 கிலோமீட்டர் செல்ல வாகனம் ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில், மஜ்ஹி எவ்வித உதவியும் கேட்கவில்லை என்று மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பிரஹ்மா கூறியதாவது:

மருத்துவமனை வார்டில் பொறுப்பில் இருந்த மருத்துவர்கள் இலவசமக நோயாளிக்கு(மனைவி தேய்) ஊசி போட்டுள்ளார்கள். இரவு 10 மணியளவில் மருத்துவர் கவலை தெரிவித்து இருந்தார்.

இருப்பினும், நள்ளிரவு 1 மணியளவில் நோயாளியும், அவரது கணவரும் காணவில்லை. விசாரணை மேற்கொண்டதில் யாரிடமும் சொல்லாமல் மனைவியை, அவரது கணவர் வெளியே கொண்டு சென்று விட்டார் என்பது தெரியவந்தது.

நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்படவும் இல்லை. இறந்துவிட்டார் என்று வார்டு டாக்டரால் உறுதி செய்யப்படவும் இல்லை. மனைவியை கொண்டு செல்வதற்காக எந்த உதவியையும் யாரிடமும் மஜ்ஹி உதவியை கேட்கவில்லை.

இவ்வாறு விளக்கம் அளித்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →