Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

Manipur iron lady Irom Sharmila ends 16 years fast. Says want to become Chief Minister.

By   /  August 9, 2016  /  Comments Off on Manipur iron lady Irom Sharmila ends 16 years fast. Says want to become Chief Minister.

    Print       Email

irom-sharmila-759உண்ணாவிரதத்தை முடித்தார் ஐரோம் ஷர்மிளா. முதல்வராக விரும்புவதாகப் பேட்டி.

மணிப்பூரில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் 2000-ம் ஆண்டு போலீஸ் வாகன அணிவகுப்பின்மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

InCorpTaxAct
Suvidha

அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் என்ற சட்டம் பாதுகாப்பு கவசமாக அமைந்தது. அந்த கொடிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி, கடந்த 2-12-2000 அன்று மனித உரிமை ஆர்வலரான ஐரோம் சானு சர்மிளா தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். கடந்த 16 ஆண்டுகளாக அவர் எந்த உணவையும் சாப்பிட மறுத்து வந்தார். எந்த பானத்தையும் குடிக்கவும் மறுத்தார்.

இதனால் அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக பலமுறை கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டும், உண்ணாவிரதத்தை மட்டும் முடிவுக்கு கொண்டு வரவில்லை. இதனால் அங்குள்ள மக்களால் அவர் இரும்புப்பெண்மணியாக கருதப்படுகிறார். அங்குள்ள ஜவகர்லால் நேரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு வலுக்கட்டாயமாக மூக்கில் ஒரு டியூப்பை செருகி அதன் மூலம் திரவ உணவு செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 26-ம்தேதி ஐரோம் சர்மிளா இம்பால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசியபோது உண்ணாவிரதத்தை கைவிட்டு அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார்.

அதன்படி 16 ஆண்டுகாலமாக தொடர்ந்த உண்ணாவிரத போராட்டத்தை இன்று அவர் நிறைவு செய்தார். தேன் குடித்து தனது உண்ணாவிரதத்தை முடித்த அவர், இந்த தருணத்தை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்று குறிப்பிட்டார்.

“நான் அரசியலில் சேர முடிவு செய்துள்ளேன். என்னை மக்கள் இருப்பு பெண் என்று அழைக்கிறார்கள். நான் அந்த பேருக்கு ஏற்றாற்போல் செயல்பட விரும்புகிறேன். எனது மக்கள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.நான் முதல்வராக வந்து அவர்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →