Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Marriage at Tirumala: Book Devasthanam’s Marriage Halls Online

By   /  February 27, 2016  /  Comments Off on Marriage at Tirumala: Book Devasthanam’s Marriage Halls Online

    Print       Email

திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.Tirumala-Venkateswara-Temple-at-Tirumala-in-Chittoor

திருமலையில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருமண மண்டபங்கள் பல இடங்களில் உள்ளன. முகூர்த்த நாளான நேற்று திருமலையில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. திருமலையிலிருந்து பாபவிநாசனம் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று ஒரே நாளில் 42 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

InCorpTaxAct
Suvidha

அங்கு திருமண ஏற்பாடுகள் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டுள்ளதா? என்பதை அறிவதற்காக தேவஸ்தான முதன்மை அதிகாரி சாம்பசிவராவ் திடீரென சென்றார். அவருடன் அதிகாரிகளும் சென்றனர். திருமணத்துக்கு தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மண்டப மேலாளரிடம் அவர்கள் கேட்டனர்.

அதன்பின் முதன்மை அதிகாரி சாம்பசிவராவ் கூறியதாவது:–

திருமலையில் திருமணம் செய்து கொள்வதை பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதி இங்கு வந்து திருமணம் செய்கின்றனர்.

ஒரு வருடத்தில் 5 ஆயிரம் திருமணம் நடக்கிறது. இவ்வாறு திருமணம் செய்ய விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளன. அதன் மூலம் திருமணத்துக்கு வருபவர்களுக்கு தரிசன ஏற்பாடுகள், இலவச உணவுகள், திருமணத்தின்போது பயன்படுத்தப்படும் பொருட்களை இலவசமாக வழங்குவது ஆகியவை குறித்து தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்ய விரைவில் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்.

நேற்று திருமணம் செய்த பக்தர்களுக்கு ஒரு வடை, ஒரு லட்டு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →