Loading...
You are here:  Home  >  Amazing Science  >  Current Article

Meteorite fall caused blast near Vellore

By   /  February 7, 2016  /  Comments Off on Meteorite fall caused blast near Vellore

    Print       Email

வேலூருக்கு அருகில் விழுந்தது எரிகல். அரசு விளக்கம்.fireballs

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்னை– பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் என்ற இடத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இன்று மதியம் வானத்தில் இருந்து திடீரென மர்ம எரிபொருள் ஒன்று கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்தது. மர்ம எரிபொருள் விழுந்ததில் அங்கு நின்றிருந்த கல்லூரி பஸ் டிரைவர் காமராஜ் (வயது 27) கருகி உயிரிழந்தார். அவர் முகம் கழுவுவதற்காக தண்ணீர் தொட்டி அருகில் சென்றிருந்தார் என்றும் அவர் சென்ற நேரத்தில் அந்த எரிபொருள் விழுந்ததாகவும் தெரிகிறது. தோட்டக்காரர்கள் சசிக்குமார் (36), முரளி (27) ஆகியோர் பலத்த தீக்காயமடைந்தனர்.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் விழுந்த மர்ம பொருளை வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், அது வெடிகுண்டு அல்ல என்றும், விண்ணில் விழுந்தது எரிகல் என்றும் உறுதி செய்துள்ளனர். இத்தகவலை வேலூர் டி.ஐ.ஜி. தமிழ்சந்திரன் தெரிவித்தார்.

மேலும், அந்த எரிகல்லை ஆய்வுக்காக அகமதாபாத் விண்வெளி நிலைய ஆராய்ச்சியாளர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →