Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Metro rail was launched by DMK – Says Karunanidhi

By   /  June 7, 2016  /  Comments Off on Metro rail was launched by DMK – Says Karunanidhi

    Print       Email

மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம்; ஜெயலலிதாவுக்கு கருணாநிதி விளக்கம்.M. Karunanidhi_0_1_0

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்காத் திட்டத்துக்கான திமுக முயற்சிக்கு அதிமுக உரிமை கொண்டாடுவதாக ஜெயலலிதாவுக்கு கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

அந்த அறிக்கையில், “மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கான தனது கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்த பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து, கடிதம் எழுதியதாக ஒரு செய்தி வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு விரைவில் அனுமதி அளிக்குமாறு, 3-6-2014 அன்றும் 7-8-2015 அன்றும் பிரதமரிடம் ஜெயலலிதா அளித்த கோரிக்கையின்படி அனுமதி வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 3-6-2014 அன்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கையை, பிரதமர் 3-6-2016-ல் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா, “சென்னை மாநகர மக்களுக்கு மெட்ரோ ரயில் உட்பட பல்வேறு வடிவிலான போக்குவரத்து வசதி களையும் மேம்படுத்தும் எண்ணத்தை எனது அரசு கொண்டுள்ளது” என்றும், “சென்னை மெட்ரோரயில் சேவையை கடந்த ஆண்டு ஜுன் மாதம் 29ஆம் தேதியன்று நான் தொடங்கி வைத்ததை தாங்கள் அறிவீர்கள்” என்றும்,

“சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை உருவாக்குவது என்ற கருத்துரு கடந்த 2003-ஆம் ஆண்டிலேயே உருவானது” என்றும் எழுதியிருக்கிறார்.

தி.மு. கழக அரசு 2006-ஆம் ஆண்டு எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தான் சென்னையில் “மெட்ரோரயில்” திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. விரைவான, நம்பத்தக்க, வசதியான, திறன்மிக்க, நவீன மற்றும் சிக்கனமான பொது போக்குவரத்து அமைப்பாகவும், பெருகி வரும் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஒரு நீண்ட காலத் தீர்வாகவும் அமைந்த இத்திட்டம் குறித்து, ஒரு விரிவான திட்ட அறிக்கையினைத் தயாரிக்கக் கழக அரசு ஆணையிட்டதைத் தொடர்ந்து, இந்தப் பணி “டெல்லி மெட்ரோ இரயில்” கழகத்திடம் அளிக்கப்பட்டது.

இத்திட்டம் என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் “சிறப்பு முயற்சித்” திட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இத்திட்டம் துணை முதலமைச்சராக இருந்த தம்பி ஸ்டாலின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டது.

விரிவான திட்ட அறிக்கை 1-11-2007-ல் கிடைக்கப் பெற்று 7-11-2007 அன்று தமிழக அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்டத்தை நிறைவேற்றுவதற்காக “சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்” என்கிற சிறப்பு வகை பொதுத் துறை நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி, இந்தியக் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 3-12-2007 அன்று பதிவு செய்தது.

இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ. 14,600 கோடி. திட்டச் செலவில் 59 சதவிகிதம் ஜப்பான் அரசின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பின் நிதி உதவி மூலம் மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டு, கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் மத்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே 21-11-2008 அன்று டோக்கியோ நகரில் கையெழுத்தானது.

இந்த மெட்ரோரயில் திட்டம் 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித் தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இவ்வாறு முனைப்போடு முயற்சித்து தொடங்கப்பட்ட திட்டம் தான் “மெட்ரோ ரயில்” திட்டம். ஆனால் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இதைப் பற்றி என்ன வெல்லாம் பேசினார்கள் என்று நினைவிருக்கிறதா?

“சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட மோனோ ரயில் திட்டத்தை அரசு செயல்படுத்தும்.

முதற்கட்டமாக 111 கிலோ மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக 300 கிலோ மீட்டர் வரை விரிவு படுத்தப்படும். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க “மோனோரயில்” திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.

அதற்குப் பிறகு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “மோனோரயில்” திட்டத்தை விரைவில் தொடங்குவதற்குத் தேவையான நிதி ஆதாரம் இந்த ஆண்டிலேயே கண்டறியப்படும் என்றார்.

மீண்டும் 30-1-2012 அன்று ஆளுநர் உரையில்” மோனோரயில் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப் புள்ளி கோரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொன்னார். அதன் பிறகு 26-3-2012 அன்று படித்த நிதி நிலை அறிக்கையில் மோனோரயில் 4 வழித் தடங்களில் இயங்கும் என்றும், எந்தெந்த வழித் தடங்கள் என்றும் விரிவாகப் படித்தார்.

அதன் பிறகு 16-6-2012 நாளிதழ் ஒன்றில் 34 இடங்களில் மோனோ ரயில் நிலையங்கள் என்றும், அமைச்சர் தலைமையில் 2 மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை என்றும் செய்தி வந்தது.

தி.மு.கழக ஆட்சியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால் கொண்டு வரப்பட்ட “மெட்ரோ”ரயில் திட்டத்தினை ஏற்கக் கூடாது என்ற ஜெயலலிதாவின் வழக்கமான காழ்ப்புணர்ச்சி காரணமாக அறிவிக்கப்பட்ட போட்டித் திட்டம் தான் “மோனோ”ரயில் திட்டம்.

ஆனால் அந்தத் திட்டம் நடைமுறைக்கு உகந்ததல்ல என்பதை பின்னர் உணர்ந்து கொண்ட அ.தி.மு.க. அரசு மெட்ரோரயில் திட்டத்தை ஏற்றுக் கொண்டது என்பது தான் உண்மை.

ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா மெட்ரோரயில் சேவையை உருவாக்குவது என்ற கருத்துரு, அவருடைய ஆட்சிக் காலத்திலேயே உருவானது என்பதைப் போல பிரதமருக்கு எழுதிய தனது கடிதத்திலே செயற்கையாகப் பெருமை தேடிக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து அந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையிலும் பத்தி 72இல் “ஆளுநர் உரையில் அறிவித்தவாறே இத்திட்டத்தில் திருவொற்றியூர் இணைக்கப்படுவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.

இவற்றிலிருந்து சென்னை மெட்ரோரயில் திட்டத்திற்கும் சரி, அதன் விரிவாக்கத் திட்டத்திற்கும் சரி, முதன் முதலில் முயற்சி எடுத்துக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் என்பதையும், முதலில் “மோனோ”ரயில் திட்டம் தான் சிறந்தது என்று ஏட்டிக்குப் போட்டியாகக் கூறி வந்த ஜெயலலிதா பின்னர் தன்னைத் திருத்திக் கொண்டு மெட்ரோரயில் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தார் என்பதையும், கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட முயற்சிக்குத் தான் தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது என்பதையும் ஜெயலலிதாவும் மற்றவர்களும் புரிந்து கொண்டால் சரி!

எப்படியோ கழக ஆட்சியில் மேற்கொண்ட விரிவாக்கத் திட்டம் சம்பந்தமான முயற்சிக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்திருப்பது, அந்தத் திட்டத்திற்காக முதலில் முயற்சி மேற்கொண்டவன் என்ற முறையில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் சென்னை மாநகர மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →