Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Modi compares Kerala with Somalia creates fierce criticism.

By   /  May 11, 2016  /  Comments Off on Modi compares Kerala with Somalia creates fierce criticism.

    Print       Email

modi_650_041014123314கேரளத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்டார் மோடி. கேரளத்தில் கடும் எதிர்ப்பு.

பிரதமர் மோடி கடந்த ஞாயிறு அன்று கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர் கேரள பழங்குடி சமூகத்தின் மத்தியில் குழந்தைகள் இறப்பு விகிதம் சோமாலியாவை விட மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டார். இது கேரளா மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை, வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவுடன் கேரளாவை ஒப்பிட்டதை அம்மாநில மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

InCorpTaxAct
Suvidha

இது குறித்து அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் “உங்கள் கூற்றுக்கும் உண்மையான  சூழ்நிலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உங்கள் வார்த்தை மக்களிடம் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் நாகரிகத்தை கடைப்பிடித்து உங்கள் வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். ஒரு பிரதமர் தனது நாட்டில் சோமாலியா போன்ற ஒரு மாநிலம் இருப்பதாக கூறுவது வெட்ககேடானது இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் சமூகவலைதளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகன்லால் நடித்த மலையாள படமான நரசிம்ஹமாவில் உள்ள பிரபல வசனமான “நீ போ மகனே தினேஷா” என்பதை கொஞ்சம் மாற்றி ”போ மகனே மோடி”(#PoMoneModi) என்ற டுவிட்டர் ஹேஸ்டேக்கை டிரெண்டிங் செய்து மலையாளிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →