Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Modi consulting to appoint Anandi Ben Patel as Governor for Tamil Nadu.

By   /  August 2, 2016  /  Comments Off on Modi consulting to appoint Anandi Ben Patel as Governor for Tamil Nadu.

    Print       Email

anandiben-patel-33குஜராத் முதல் மந்திரி ஆனந்தி பென் படேலை தமிழ்நாடு கவர்னராக நியமிக்க மோடி ஆலோசனை.

குஜராத் முதல்வராக இருந்த மோடி பிரதமர் ஆனதும் அவருடைய அமைச்சரவையில் இருந்த மூத்த அமைச்சரான ஆனந்திபென் பட்டேல் முதல்வராக அமர்த்தப்பட்டார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் கடந்துவிட்டன.

InCorpTaxAct
Suvidha

இந்த நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஆனந்தி பென் படேல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ள ஆனந்தி பென் படேல் “பா.ஜனதா கட்சி கொள்கைப்படி 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆட்சி பதவியில் இருப்பதில்லை. எனக்கு 75 வயது ஆகப் போவதால் நான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுகிறேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பி விட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய முதல்-மந்திரியாக மாநில சுகாதார மந்திரி நிதின்பாய் பட்டேல் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா மாநில தலைவர் விஜய்ரூபானி, மாநில நிதி மந்திரி சவுரப் படேல் ஆகியோரும் முதல்-மந்திரி பதவி போட்டியில் உள்ளனர்.

ஒரு வேளை அகில இந்திய தலைவர் அமித்ஷாவே குஜராத் முதல்-மந்திரியாக நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் அமித்ஷா மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் குஜராத் முதல்-மந்திரி ஆனந்திபென் பட்டேல் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். என்கவுண்டர் வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டதால், அவரை முதல்-மந்திரியாக்க வசதியாகத்தான் ஆனந்தி பென் பட்டேல் ராஜினாமா செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

இதுபற்றி அமித்ஷாவிடம் கேட்டபோது, நான் தேசிய அரசியலில் உள்ளேன். மாநில அரசியலுக்கு திரும்ப எனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார்.

முதல்-மந்திரி பதவியை பிடிப்பதற்கு கடும் போட்டி ஏற்பட்டால், அமித்ஷாவை முதல்-மந்திரியாக ஆக்குவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. குஜராத் முதல்-மந்திரி இன்றே தேர்வு செய்யப்படலாம் என கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனந்தி பென் பட்டேல் ராஜினாமா செய்தாலும், அவருக்கு உரிய கவுரவத்தை அளிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. எனவே அவர் ஏதாவது ஒரு மாநிலத்தில் கவர்னராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும் அவர் தமிழக கவர்னராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் விரைவில் முடிய உள்ளது.

ஆனந்திபென் பட்டேலை தமிழக கவர்னராக நியமிக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. ஒரு வேளை குஜராத் அருகே உள்ள மாநிலங்களில் கவர்னராக இருக்க விரும்பினால் பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →