Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Modi expert in lip service only – Says Rahul Gandhi.

By   /  February 28, 2017  /  Comments Off on Modi expert in lip service only – Says Rahul Gandhi.

    Print       Email

மோடி வாய்ஜாலம் காட்டுவதில் வல்லவர் – ராகுல் காந்தி கடும் தாக்கு.201702281852366953_PM-Modi-only-providing-lip-service--Rahul-Gandhi_SECVPF

 

InCorpTaxAct
Suvidha

 

மணிப்பூர் மாநில சட்டசபைக்கான தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. மார்ச் 3-ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடக்க இருக்கும் பகுதியில் கடந்த 25-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி ஊழலில் திளைத்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மணிப்பூர் மாநிலத்தின் ஹப்டா நகரில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தார். இந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நல்ல நாட்கள் வருவதாக மோடி கூறினார். ஆனால், நல்ல நாட்கள் எங்கே?. மணிப்பூர் மாநில மக்கள் தனித்துவமான அடையாளங்களையும், அறிவையும் கொண்டுள்ளனர் என காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். இங்கே மதவாத சக்திகளின் வேலைகள் எடுபடாது. போலோ விளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் வீரர், வீராங்கணைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். இதற்கெல்லாம், மாநில அரசு முன்னெடுத்த சிறந்த திட்டங்களே காரணம்.

பணமதிப்பிழப்பு திட்டம் மூலம் நாட்டில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகளை நடு ரோட்டில் நிறுத்திய மோடி, அவர்களை தங்களது தொழிலை விட்டே வெளியேற்றி விட்டார். நாட்டில் 6% கருப்பு பணம் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. மற்றவை அனைத்தும் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு மோடி நாட்டு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாய் ஜாலத்தில் ஈடுபட்டுள்ளார். மோடியின் வாக்குறுதிகளை மக்கள் நிராகரிப்பார்கள்.

இவ்வாறு கூறினார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →