Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Modi government policies makes Kashmir burning:  Rahul Gandhi

By   /  July 22, 2017  /  Comments Off on Modi government policies makes Kashmir burning:  Rahul Gandhi

    Print       Email

மோடியின் நிர்வாகத் தோல்விகளால் காஷ்மீர் பற்றி எரிகிறது : ராகுல் காந்தி.

காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாத இயக்க தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதில் இருந்து ஓராண்டுக்கும் மேலாக காஷ்மீரில் தொடர் வன்முறைகள் நிலவுகின்றன. இதனால், பல இடங்களில் கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில், பாராளுமன்றத்திற்கு வெளியே நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி கூறியதாவது:- “பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கைகளே காஷ்மீர் பற்றி எரிவதற்கு காரணம். இதை நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன்.

காஷ்மீர் பிரச்னையில் 3-வது நாடு தலையிட வேண்டும் என சொல்வது தவறு. இந்தியா தான் காஷ்மீர். காஷ்மீர் தான் இந்தியா. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. இந்தியாவின் சொந்த பிரச்சினையில் வேறும் யாரும் தலையிட முடியாது” எனக் கூறினார்.

முன்னதாக, காஷ்மீர் பிரச்னையை தீர்க்க அமெரிக்கா அல்லது சீனாவின் உதவியை இந்தியா நாட வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →