நரேந்திர மோடி இந்தியாவின் பேரரசர் அல்ல பிரதமர் மட்டும்தான்; சோனியா காந்தி சாடல்.
மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு ஆனதை பாரதீய ஜனதா மிகப்பிரம்மாண்டமான முறையில் கொண்டாடியது. பாரதீய ஜனதாவின் 2 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சோனியா காந்தி, கூறியதாவது:-“இதுபோன்ற நிலையை எப்போதும் நான் ஒருநாளும் பார்த்தது இல்லை. இங்கு பிரதமர் தான் இருக்கிறார். பேரரசர் அல்ல.
நாட்டில் கொடிய வறுமை நிலவுகிறது. வறட்சி இருக்கிறது. விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கின்றனர். எனவே இதுபோல் விழா கொண்டாடுவது தேவையற்றது. மோடியின் மந்திரிகள்தான் இந்த நிலையை (பேரரசர் மோடி) ஏற்படுத்தி கோலாகலமாக கொண்டாடுகின்றனர்“ என்று குறிப்பிட்டார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.