மோடி பார்த்த மோடியின் மெழுகுச்சிலை.
லண்டனுக்கு செல்கிறவர்கள் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்று மேடம் துசாட்ஸ் மியூசியம். அங்கு உலக பிரசித்தி பெற்ற தலைவர்கள், பிரபலங்களின் அச்சு அசல் மெழுகு சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன.
அந்த பிரபலங்களின் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியும் இடம் பெற்றார். உலகளவில் மிகவும் பிரபலமாக விளங்கும் மோடியின் மெழுகு சிலையை வைக்க திட்டமிட்ட அருங்காட்சியகம், இதற்காக அண்மையில் பிரதமர் மோடியை அளவு எடுத்துச்சென்றது.
தற்போது மோடியின் மெழுகு சிலை தயாரிக்கும் பணி நிறைவு பெற்றதையடுத்து, வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என்பதால், மெழுகுச்சிலை இன்று அவருக்கு காண்பிக்கப்பட்டது. அச்சு அசல் உண்மை போன்றே தோற்றமளிக்கும் மெழுகுச்சிலையை பிரதமர் மோடி பார்த்தார்.
பின்னர் மெழுகுச்சிலை தயாரித்த மேடம் டுசாட்ஸ் குழுவினரை பாராட்டிய மோடி “நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. கலையை பொறுத்தவரை மேடம் டுசாட்ஸ் குழு அசாதாரண வேலை செய்துள்ளது. இயல்பாக கடவுள் பிரம்மா செய்யும் பணியை கலைஞர்கள் செய்துவருகிறார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.