Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Modi opened up space for terrorists in Kashmir: Rahul Gandhi in Berkeley

By   /  September 13, 2017  /  Comments Off on Modi opened up space for terrorists in Kashmir: Rahul Gandhi in Berkeley

    Print       Email

மோடியின் ஆட்சியில் தீவிரவாதிகளின் வளர்ச்சி அதிமாக உள்ளது – அமெரிக்காவில் ராகுல் பேச்சு

 

Suvidha
Biryani Pot

 

 

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் 2 வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக மாணவர்களிடையே ‘இந்தியா 70: முன்னோக்கிய பாதையின் பிரதிபலிப்பு’ என்ற தலைப்பில் இன்று கலந்துரையாடினார்.

அப்போது  மாணவர்களிடையே ராகுல்காந்தி பேசியதாவது:-

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் அகிம்சை முறையே இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின் ஒற்றுமைக்கு காரணம் ஆகும். இந்தியாவை போன்ற ஜனநாயக நாடு உலகில் இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் அடித்தளமாக உள்ளனர். இதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த அதிகபடியான மக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளனர்.

வன்முறை நாட்டின் அமைதியை அழிக்கும் திறன் வாய்ந்தது. அதை விட தவறான அரசியல் முடிவுகள் மிகவும் ஆபத்தானது. உதாரணமாக மூத்த பொருளாதார ஆலோசகர் மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி செயல்படுத்தப்பட்ட மோடியின் பழைய ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் திட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. தலைமையில் 1000 பேர் கொண்ட குழு கம்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு என்னை பற்றிய தவறான கருத்துகளை பரப்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டை ஆளும் தலைவர் தான் என மோடியை ராகுல் காந்தி தாக்கி பேசினார்.

மேலும், மன்மோகன் சிங் பிரதமர் பொறுப்பில் இருந்த 9 வருடங்கள் நான் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வந்த வன்முறைகளுக்கு எதிராக பாடுபட்டேன். 2013 ஆம் ஆண்டின் முடிவில் காஷ்மீரில் நிலவி வந்த வன்முறை முழுமையாக அகற்றப்பட்டது. ஆனால் மோடியின் ஆட்சியில் தீவிரவாதிகளின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. இதனால் நாட்டில் வன்முறை பெருகி கொண்டே வருகிறது என ராகுல் காந்தி கூறினார்.

Charter Global
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

TANA will not let criminals run our well earned reputation, Satish Vemana

Read More →