Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Modi visits US for the 4th time in 2 years.

By   /  April 20, 2016  /  Comments Off on Modi visits US for the 4th time in 2 years.

    Print       Email

modiஇரண்டே ஆண்டுகளில் நான்காவது முறையாக அமெரிக்காவுக்கு வருகிறார் பிரதமர் மோடி.

. கடந்த மாதம் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டின்போது, இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் விரிவான ஆலோசனை நடத்த விரும்புவதாக தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, மீண்டும் ஒருமுறை வாஷிங்டன் நகருக்கு வருமாறு அவரிடம் அழைப்பு விடுத்திருந்ததாக தெரிகிறது.

InCorpTaxAct
Suvidha

அந்த அழைப்பை ஏற்று, வரும் ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் வரும் ஜூன் மாதம் ஏழு அல்லது எட்டு தேதியில் இந்த சந்திப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, இருநாடுகளுக்கு இடையிலான கடல்சார் பொருளாதாரம், விண்வெளி ஆய்வுத்துறையில் ஒத்துழைப்பு, அணுசக்தி வர்த்தகம் போன்ற பல விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசிப்பார்கள் என நம்பப்படுகிறது. மேலும், குஜராத் மாநிலத்தில் ஆறு அணு உலைகள் அமைப்பது தொடர்பாக அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்துடன் இந்திய அணு மின்சக்தி கழகம் ஒப்பந்தம் செய்து கொள்ளும் எனவும் தெரியவந்துள்ளது.

இந்திய பிரதமராக பதவியேற்ற பின்னர் வரும் ஜூன் மாதம் நான்காவது முறையாக அமெரிக்காவுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, இந்த பயணத்தின்போது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவை சுற்றிப் பார்க்க திட்டமிட்டுள்ளதாகவும், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இருநாட்டு தலைவர்களும் வெளியிடுவார்கள் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →