தலித்கள் மீதான வன்முறை விவகாரத்தில் மோடி கும்பகர்ணன் போல் தூங்குகிறார்: மாயாவதி குற்றச்சாட்டு
குஜராத் உனா தலித் மக்கள் மீதான வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் அந்த மாநிலத்தை மட்டுமல்லாமல் நாட்டினையே திரும்பி பார்க்க வைத்துவிட்டது.
இது மட்டுமல்லாமல் பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களிலும் பசுவதை என்ற கருத்தினை கொண்டு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், நீண்ட நாள் கழித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு நாட்களாக புதுடெல்லி மற்றும் தெலுங்கானாவில் தலித் மக்களுக்கு ஆதரவாக பேசிய பேச்சு நாடுமுழுவதும் ஆதரவும் விமர்சனமும் எழுந்துள்ளது.
என்ன இருந்தாலும் பிரதமரின் இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று ஒரு தரப்பினரும், இல்லை உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே இந்த பேச்சு அமைந்துள்ளது என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தலித் மக்கள் மீதான வன்முறை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கும்பகர்ணன் போல் தூங்குகிறார் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டியுள்ளார்.
தலித் மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை பிரதமர் மோடி மிகவும் காலம் தாழ்ந்து இரண்டு வருடங்கள் கழித்து கண்டித்துள்ளதாகவும், உத்தரபிரதேசம் தேர்தலை கருத்தில் கொண்டே பேசியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.