பிரதமர் மோடி பதவியேற்ற 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மோடியை சந்தித்த மோடியின் தாயார்.
2014-பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, நாட்டின் பிரதமராக 26-5-2014 அன்று நரேந்திர மோடி பதவியேற்றார். மோடியின் தாயாரன ஹீரா பென், குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டம், வட்நகர் பகுதியில் உள்ள தங்களது பூர்வீக வீட்டில் தனது மூத்த மகனுடன் வாழ்ந்து வருகிறார்.
பிரதமரான பின்னர் ஓரிருமுறை அரசுமுறை பயணமாக குஜராத் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மோடி, தனது பூர்வீக வீட்டுக்கு சென்று தாயாரை சந்தித்துள்ளார். இதுதவிர, தனது பிறந்தநாட்களின்போது தாயாரிடம் ஆசி பெறுவதற்காகவும் அவர் சென்றுள்ளார்.
எனினும், புதுடெல்லி, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் வசித்துவரும் மோடியை சந்திக்க அவரது தாயார் ஒருமுறைகூட வந்ததில்லை. இந்நிலையில், டெல்லி இல்லத்தில் தனது தாயாருடன் இருக்கும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி நேற்று பதிவிட்டுள்ளார்.
தன்னுடன் டெல்லியில் தங்கியிருந்த தாயார், குஜராத்துக்கு புறப்பட்டு சென்றபின் இந்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ள மோடி, நீண்ட நாட்களுக்கு பிறகு டெல்லியில் உள்ள தனது இல்லத்துக்கு முதன்முறையாக வருகைதந்த தாயாருடன் மகிழ்ச்சிகரமான சிறிது நேரத்தை அனுபவிக்க நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.