Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Money for voters in  Tamil Nadu, seized money crossed Rs.100 Crore

By   /  May 13, 2016  /  Comments Off on Money for voters in  Tamil Nadu, seized money crossed Rs.100 Crore

    Print       Email

dc-Cover-s1kehm6f3iprg7lca2rrsrsra6-20160510160320.Mediஓட்டுக்குப் பணம் ; தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.100 கோடியைத் தாண்டியது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இதற்காக தேர்தல் கமிஷன் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, போலீஸ் கண்காணிப்பு குழு மற்றும் வருமானவரித்துறை குழு ஆகியவை தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

InCorpTaxAct
Suvidha

ஒரு இடத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தலைமை செயலகத்தில் உள்ள மாநில தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் வருமானவரித்துறை குழு ஆகியவற்றுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தவுடன் அந்த இடத்துக்கு குழுவினர் சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நெருங்க நெருங்க பறக்கும் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு பண நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதுவரை மொத்தம் 18 ஆயிரத்து 828 புகார்கள் வந்துள்ளன.

நேற்றுமுன்தினம் சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு பணம் வினியோகிக்கப்படுவதாக தகவல்கள் வந்தன. இதை தொடர்ந்து பறக்கும் படையினர் அங்கு சென்றதால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்பட்டது.

அரவக்குறிச்சி தொகுதியில் பறக்கும் படையினர் வருவதை பார்த்ததும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த ஒருவர் கையில் வைத்திருந்த ரூ.68 ஆயிரத்தை கீழே போட்டு விட்டு தப்பினார். அவை பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் சிந்துபட்டியில் உள்ள ஒரு வீட்டில் குளிர்சாதன பெட்டியில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் பறக்கும் படையினர் வருவதை பற்றி அரசியல் கட்சியினருக்கு தகவல் கொடுத்த ஒருவரை பறக்கும் படையினர் விரட்டி பிடிக்க முயன்றபோது அவர் தப்பினார். அவர் கீழே போட்டு விட்டுச் சென்ற ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறக்கும் படையினர் கைப்பற்றினார்கள். மதுரையில் நேற்றுமுன்தினம் 6 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இதுவரை 200-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு ரூ.100 கோடியே 32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் வருமானவரித்துறையினர் அதிகபட்சமாக ரூ.32 கோடியே 30 லட்சம் கைப்பற்றியுள்ளனர்.

இதுவரை நடந்த தேர்தல்களில் இந்த சட்டசபை தேர்தலில் தான் அதிகபட்சமாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்ற மாநில தேர்தல்களில் கூட இவ்வளவு அதிக தொகை கைப்பற்றப்பட்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →