Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

More importance would be given to women in DMK’s manifesto  – says Kanimozhi

By   /  April 8, 2016  /  Comments Off on More importance would be given to women in DMK’s manifesto  – says Kanimozhi

    Print       Email

kanimozhiதிமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்- கனிமொழி அறிவிப்பு.

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று
நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார்.

InCorpTaxAct
Suvidha

கூட்டத்தில், தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர்
பேசியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கை மிகச்சிறந்த தேர்தல் அறிக்கையாக விரைவில் வெளி வர உள்ளது. அதில், பெண்களுக்கு பெருமளவில் பல
நலத்திட்டங்களை கருணாநிதி வைத்துள்ளார். நீங்கள் தேர்தல் அறிக்கையை படித்து பார்த்து மற்ற பெண்களிடம் கொண்டு செல்ல
வேண்டும். பெண்கள், தமிழக மக்கள் முன்னேற்றத்துக்காக உழைக்கும் ஒரே இயக்கம் தி.மு.க. தான். பெண்கள் சொந்த காலில் நிற்க
வேண்டும் என்று நினைத்தவர் கருணாநிதி.

தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி இன்றும் வேலை செய்கிறது. மக்களுக்கு அக்கறையோடு நல்ல பொருட்களை
விசாரித்து வாங்கி கொடுத்தோம். தமிழ்நாடு எல்லா துறைகளிலும் பின்னடைந்து வருகிறது. டாஸ்மாக்கில் மட்டும் தான் வளர்ந்து வருகிறது. குடிப்பழக்கத்தால் பாதிக்கப்படாத குடும்பமே இல்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. கருணாநிதி மதுவை ஒழிப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.

அதை எல்லாரிடமும் நீங்கள் சொல்ல எதிர்காலத்தில் வளர்ச்சி, மலர்ச்சியை ஏற்படுத்த உதயசூரியனால் மட்டும் தான் முடியும்.
கருணாநிதி, மு.க.ஸ்டாலினால் மட்டும் தான் முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →