Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

More than 100 people killed in Kollam Temple fire incident : Modi visits victims

By   /  April 10, 2016  /  Comments Off on More than 100 people killed in Kollam Temple fire incident : Modi visits victims

    Print       Email

kerala-fire-new-759கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பரவூர் பகுதியில் உள்ள புட்டிங்கல் தேவி கோயிலில் வாண வேடிக்கையால் இன்று அதிகாலை நிகழ்ந்த வெடி விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். 350-க்கு அதிகமானோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் இந்த கோர விபத்து தொடர்பாக கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மிக மோசமான காயமடைந்தவர்களை தீவிர சிகிச்சைக்காக இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களில் ஏற்றிச் செல்லவும் ஏற்பாடு உத்தரவிட்டார். விபத்தில் சிக்கிய உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக விரைந்து செல்லுமாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டாவை அறிவுறுத்திய பிரதமர் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழந்த கொல்லம் மாவட்டத்துக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும், சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற தீர்மானித்தார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் உள்ளிட்ட பிரபல மருத்துவமனைகளை சேர்ந்த சுமார் 15 தீப்புண் சிறப்பு சிகிச்சை மருத்துவர் குழுவுடன் பிரதமர் மோடி இன்று பகல் 12 மணியளவில் கப்பற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கேரளாவுக்கு புறப்பட்டு சென்றார்.

modi-kollam-hospitalபிற்பகல் 3 மணியளவில் தலைநகர் திருவனந்தபுரம் வந்தடைந்த பிரதமரை கேரள கவர்னர் சதாசிவம், மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து நேராக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கி சிகிச்சை பெற்று வருபவர்களை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

அவரை சந்தித்த இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கும் பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

பின்னர், திருவனந்தபுரத்தில் இருந்து விபத்து நடந்த கொல்லம் மாவட்டத்துக்கு அவர் புறப்பட்டு சென்றார். அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லும் மோடி, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறுவதுடன் இந்த துயரச் சம்பவம் நடைபெற்ற கோயில் அமைந்துள்ள இடத்தையும் சென்று பார்வையிடுகிறார். பின்னர், இன்று மாலை கேரளாவில் இருந்து டெல்லி புறப்பட்ட செல்கிறார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →