பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்தது தேர்தல் ; 70% மேல் வாக்குப் பதிவு.
வழக்கம்போல் நகர்ப்பகுதிகளில் குறைவாகவும் கிராமப் பகுதிகளில் அதிகமாகவும் வாக்குப் பதிவு நடைபெறுவது வழக்கம். இம்முறையும் அந்த வழக்கத்திற்கேற்பவே வாக்குப்பதிவு அமைந்துள்ளது. சென்னை 51%, வில்லிவாக்கம் 50%, தேனி 75%, கடலூர் 75%, மதுரை 67%, ஈரோடு75%, நாகை 65%, புதுக்கோட்டை 71%, குன்னூர் மற்றும் ஊட்டி 67%, பென்னாகரம் 85% என்ற அளவில் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திருத்தணியில் 92% வாக்குகள் பதிவாகியுள்ளதாக ராஜேஷ் லக்கானி கூறினார்.
தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-
ஒரு சில இடங்களில் நடைபெற்ற சிறுசிறு சம்பவங்கள் தவிர, அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. கட்சிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக 10 ஆயிரம் ரூபாயுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதுகுளத்தூரில் வாக்குப்பதிவு எந்திரம் உடைக்கப்பட்டுள்ளது. வேடசந்தூரில் சரக்கு வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றி வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலின்போது தேர்தல் அதிகாரி உள்பட 5 பேர் இயற்கை மரணம் அடைந்ததாக தகவல் வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.