Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Motor Bike ambulances for Kumbakonam  Mahamagam

By   /  February 13, 2016  /  Comments Off on Motor Bike ambulances for Kumbakonam  Mahamagam

    Print       Email

மகாமக கோவில் திருவிழாவிற்கு 11 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை.Mahamaham-tank

கர்நாடக அரசைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மோட்டார் பைக் ஆம்புலன்ஸ் சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் கூடும் இடங்களில் பயன்படுத்துவது தொடர்பாக முதன்முதலாக கும்பகோணம் மகாமகம் விழாவில் அவை பயன்படுத்தப்படும் என்று தமிழ்நாடு நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா 08.02.2016 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 108 அவசரகால முதலுதவிக்கான 41 இரு சக்கர வாகனங்களின் சேவையை துவக்கி வைத்தார்.

போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகள், அதிக மக்கள் நடமாடும் பகுதிகள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத பகுகளில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடடினயாக இருசக்கர 108 ஆம்புலன்ஸ் சென்று முதலுதவி அளிக்கும்.

இந்த வகைளில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் திருவிழாவினையொட்டி சுமார் 40 லட்சம் மக்கள் கூடுவார்கள் என எதிர் பாக்கப்படுகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

mahamahamim-imageஇவ்வாணையையொட்டி, மாகாமக திருவிழாவில் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடங்களில் 11 இருசக்கர 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த இருசக்கர வாகனத்தில் கையில் எடுத்துச் செல்லக்கூடிய உயிர் வாயு சிலிண்டர் நாடித்துடிப்பை கண்டறியும் கருவி, இரத்த அழுத்தத்தை கண்டறியும் கருவி, இரத்ததில் சர்க்கரை அளவை அறியும் கருவி, உடல் சூட்டை அறியும் கருவி போன்ற உயிர்காக்கும் கருவிகளும், தேவையான அளவு மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உயிர் காக்கப்படும். மேலும் முக்கியமான இடங்களில் குறிப்பாக மகாமகம் குளத்தைச் சுற்றி 5 இருசக்கர வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

மேலும், மகாமகத்திற்காக 31 ‘108’ ஆம்புலன்ஸ் வாகனங்களும் பிரத்தியேகமாக களமிறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 108 அழைப் பாணையை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →