திமுக தேர்தல் அறிக்கை வெளியானது; பல்வேறு முக்கிய அம்சங்கள்.
சென்னை அண்ணா அறிவாயலத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தேர்தல் அறிக்கையை வெளியிட பேராசிரியர் அன்பழகன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியம்சங்கள்:-
1. மதுவிலக்கை அமல்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்படும். டாஸ்மாக் கலைக்கப்பட்டு மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் .சிறு- குறு விவசாயிகள் பெற்றுள்ள கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். நம்மாழ்வார் பெயரில் இயங்கை மேலாண்மை மையம் தொடங்கப்படும். நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதாய விலையாக படிப்படியாக ரூ. 2500 வழங்கப்படும். 2 லட்சம் இளைஞர்களை சேர்த்து வணிக அமைப்புகள் உருவாக்கப்படும்.
*விவசாயத்திற்கு தனி பட்ஜெட்.,மகளிருக்கு 9 மாதம் மகப்பேறு கால விடுமுறை.,லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும்.,ஆவின்பால் விலை லிட்டருக்கு ரூ. 7 வரை குறைக்கப்படும் ,கிரானைட் அரசே ஏற்று நடத்தும், ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10,000, விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், முதியோர் உதவித் தொகை ரூ. 1300ஆக உயர்த்தப்படும், மாணவர்களுக்கு இலவச இண்டர்நெட் சேவை வழங்கப்படும்.
அண்ணா உணவகங்கள் திறக்கப்பட்டு நல்ல உணவு மலிவு விலையில் வழங்கப்படும், மதிய உணவில் இலவசமாக பால் சேர்க்கப்படும், தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்…… உட்பட மேலும் பல கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.