காஷ்மீரில் மெஹ்மூபா தற்சமயம் பதவி ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று தெரிகிறது- தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை.
காஷ்மீரில் முப்தி முகமதி சயீத் தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி, பாரதிய ஜனதா அரசுகளின் கூட்டாட்சி நடைபெற்று வந்தது.
ஆனால் 80வது பிறந்தநாளைக் கொண்டாட இருந்த நிலையில் முதல்வர் முப்தி முகமதி சயீது உடல்நலக் குறைவால் திடீரென்று மரணமடைந்து விட்டார்.
அதைத் தொடர்ந்து அவரது மகள் மெஹ்பூபா புதிய முதல்வராகப் பதவி ஏற்பார் என்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் எம்எல்ஏக்கள் எல்லாரும் கையெழுத்துப் போட்டு கவர்னர் வோராவிடம் கடிதம் கொடுத்த செய்தியும் வந்தது. ஆனால் பதவி ஏற்பு சம்பவம் நடைபெறவில்லை. மெஹபூபா ஏதோ காரணத்தினால் தள்ளிப்போட்டுக்கொண்டே போனார்.
தனக்கு பாஜக ஆதரவு தருவதுபோல் சொன்னாலும் நிஜத்தில் தம்மை செயலாற்ற விடாமல் செய்யும் திட்டங்கள் எல்லாம் அவர்களிடம் உள்ளது என்ற தகவல்கள் மெஹ்மூபாவின் கட்சியினரிடத்தில் உள்ளது என்றும் அதனை பாஜக தெளிவு படுத்தும்வரை மெஹ்பூபா பதவி ஏற்பது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி முன்னாள் அமைச்சர் நயீம் அக்தர் நிருபர்களிடம் பேசும்போது “மெஹ்பூபா தலைமையில் ஆலோசனை நடத்தினோம். முப்தியின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்களை எப்படி முன்னெடுத்துச் செயல்படுத்துவது என்பது குறித்து விவாதித்தோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் புதிய அரசு அமைப்பது குறித்தும் ஆலோசித்தோம்.
இருப்பினும், கூட்டணி செயல் திட்டத்தை அமல் படுத்துவதற்கு எழுத்தாலும், செயலாலும் டெல்லி முன்வந்து அதில் எங்களுக்கும் நம்பிக்கை ஏற்படுகிறபோது மெஹ்பூபா முடிவு எடுப்பார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன” என்று தெரிவித்தார் நயீம் அக்தர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.