என்னுடைய குழந்தை பாசில் மாதிரி வரவேண்டும் – நஸ்ரியா விருப்பம்.
தமிழ்ப்பட உலகில் காலடி எடுத்துவைத்த நஸ்ரியா பிரபலமாகும் நிலையில் திருமணம் செய்துகொண்டு விலகினார். மலையாள நடிகர் பகத் பாசிலைத் திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்கவில்லை. நஸ்ரியா விரும்பினால் நடிக்கலாம். அவர் நடிப்புக்கு நான் தடைபோட மாட்டேன் என்று பகத் பாசில் கூறியுள்ள நிலையில் நஸ்ரியா குடும்ப வாழ்வில்தான் அதிக அக்கறைக் காட்டி வருகிறார்.
இதுபற்றி நஸ்ரியா கூறியதாவது ; “பகத் எனது அன்பான கணவர் மட்டுமல்ல, அவரது பெற்றோர்களுக்கும் நல்ல மகனாக இருந்துவருகிறார். தங்களுடைய நான்கு பிள்ளைகளில் பகத் பாசில்தான் நல்ல பிள்ளை என்று மாமியார் கூறுவார்.
நான் குழந்தையாக இருந்தபோது அதிகமாக குறும்பு செய்வேன். ஆனால் என் குழந்தைகள் என்னைப்போல் இருக்கக்கூடாது. பகத்போல நல்ல சமர்த்தான பிள்ளைகளாக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.” என்றார் நஸ்ரியா.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.