Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

My  concentration is on boundaries : Not on sixer’s. Says Virat Kohli

By   /  February 24, 2016  /  Comments Off on My  concentration is on boundaries : Not on sixer’s. Says Virat Kohli

    Print       Email

virat-kohli_reuters_m3பெரிய அளவிலான சிக்சர்களை என்னால் அடிக்க முடியாது. பவுண்டரிகள் மீதுதான் என் கவனம் – விராட் கோலி.

பெரிய அளவிலான சிக்ஸர்களை என்னால் அடிக்க முடியாது என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்தார்.

InCorpTaxAct
Suvidha

33 டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி 27 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார். அதேவேளையில் 127 பவுண்டரிகள் விளாசியுள்ளார். ஆசிய கோப்பை டி 20 தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் இது தொடர்பாக மிர்பூரில் விராட் கோலி கூறும் போது, டி 20 போட்டிகளின் ஆரம்பத்தில் 10 பந்துகளில் 10 ரன்கள் சேர்ப்பது தான் எனது ஆட்டமாக இருந்தது.

பெரிய அளவிலான ஷாட் விளையாடி சிக்ஸர்கள் அடிக்க முடியாததால் பவுண்டரிகள் அடிப்பதில் கவனம் செலுத்தினேன். நாங்கள் சரியான வேகத்தில் ஆசிய கோப்பை போட்டியை எதிர்கொள்கிறோம். நாங்கள் அதீத நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. எல்லா எதிரணிகளையும் மதிக்கிறோம்” என்றார்.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வங்கதேசம் வெல்ல காரணமாக இருந்த அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு வாழ்த்தும் தெரிவித்தார் துணை கேப்டன் விராட் கோலி.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, கடந்த ஓராண்டாக முஸ்டாபிஜூர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச்சாளர் தொல்லை கொடுப்பது ஆட்டத்தில் மிகவும் முக்கியமானது. இது ஆட்டத்தை மேலும் வலுப்படுத்தும். பந்து வீச்சாளரும் புதிய நுணுக்கங்களை கையாளும் நிலையில் அதற்கு தகுந்தபடி பேட்ஸ்மேன்களும் தயாராக வேண்டும். தற்போது ஆட்டத்தின் வடிம் சிறப்பாக மாறி வருகிறது.

இந்தியா, வங்கதேசம் ஆகிய இரு அணிகளுமே வலம் வாய்ந் தது. எதிரணியின் பலத்தை நாங் கள் கருத்தில் கொள்ள மாட்டோம். எங்களின் பலம் மூலம் எதிரணியின் பலவீனத்தை கண்டறிந்து வெற்றி காண்போம். இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதிக அளவிலான ஆட்டங்களில் விளையாடிய அனு பவம் உள்ளதால் எந்த நேரத்தில் அணிக்கு என்ன தேவை, எப்படி செயல்பட வேண்டும் என தெரிந்து வைத்துள்ளனர். அதனாலேயே விமானி இல்லாத விமானம் என அணி குறித்து தோனி கருத்து தெரிவித்திருந்தார். அதில் எந்த தவறும் இல்லை.

இவ்வாறு தெரிவித்தார் விராட் கோலி.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →