Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

‘My  fire works will  continue’- says  Gayle.

By   /  March 18, 2016  /  Comments Off on ‘My  fire works will  continue’- says  Gayle.

    Print       Email

chris-gayle-in-ICC-t20-world-cup‘என்னுடைய தீப்பொறி அதிரடிகள் தொடரும்’- கெய்ல் சொல்கிறார்.

டி 20 உலகக் கோப்பையில் நேற்று முன்தினம் இங்கிலாந் துக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் அணி, கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தால் எளிதாக கடந்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கெய்ல் 47 பந்தில் சதம் அடித்து டி 20 உலகக் கோப்பை யில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

InCorpTaxAct
Suvidha

மேலும் அவர் 11 சிக்ஸர்கள் பறக்க விட்டார். டி 20 உலகக் கோப்பையில் இதுவரை ஒரு ஆட்டத்தில் தனிநபராக ஒருவர் 10 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையும் கெய்ல் தான் நிகழ்த்தியிருந்தார். 2007ல் உலகக் கோப்பையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்த சாதனையை படைத்திருந்தார்.

மேலும் உலகக் கோப்பையில் 2வது முறையாக சதம் அடித்தவர் என்ற பெருமைக்கும் உரியவரா னார் கெய்ல். 2007 உலகக் கோப் பையிலும் அவர் சதம் அடித்தி ருந்தார். இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்த கெய்ல் கூறும்போது, “உலகக் கோப் பைக்கு சிறந்த முறையில் தயாராகியிருந்தோம்.

மார்லோன் சாமுல்வேல்ஸூம் உதவியதால் நெருக்கடி இல்லாமல் விளையாட முடிந்தது. ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்ததால் இந்த ஆடுகளத்தில் இலக்கை துரத்தி பிடிக்க முடியும் என நம்பினோம். இதே ஆட்டத்தை இலங்கைக்கு எதிராகவும் எடுத்துச்செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் ஒரு முறை நான் அதிரடியால் மகிழ்விப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →