Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

My image not the most important thing PM’s job is to improve nation’s image: Says  Modi

By   /  July 6, 2016  /  Comments Off on My image not the most important thing PM’s job is to improve nation’s image: Says  Modi

    Print       Email

modi-mathura“என் மீதான மதிப்பு முக்கியம் அல்ல, நாட்டின் மதிப்பை உயர்த்திக்காட்டுவதுதான் என் வேலை” என பிரதமர் மோடி மனம் திறந்து கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு ஊடகங்களும் எழுத்து மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்தார். அவர் எழுத்து மூலம் அளித்த அந்த பதில்களில் கூறி இருப்பதாவது:-

InCorpTaxAct
Suvidha

எனது நோக்கம், மாற்றத்துக்கான சீர்திருத்தங்களை செய்வதுதான். எனது ஆட்சியின் முடிவில், நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று கூற வேண்டுமானால், மாற்றத்தை மக்கள் அனுபவப்பூர்வமாக உணர வேண்டும். நான் மட்டுமே மாற்றத்தை உணர்ந்தால் அது வெற்றி அல்ல.

ஊழலை வேரடி மண்ணாக வீழ்த்திவிட முடியும் என்று மக்களை எனது அரசால் நம்ப வைக்க முடிந்திருக்கிறது. இந்த மாற்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று. அது நடந்திருக்கிறது என்று சொன்னால், நான் செய்ய விரும்புகிற பிற மாற்றங்களும் நடக்கும். எல்லா மட்டத்திலும் ஊழலை ஒழிப்பதற்கு எனது அரசு கடுமையாக உழைக்கிறது.

சந்தேகங்களை வென்று முடிப்பதும், எங்கள் நேர்மையை மக்களை நம்ப வைப்பதும் எனக்கு சவாலாக அமைந்துள்ளது.

நாட்டின் மீதான மதிப்பை உயர்த்திக்காட்டுவதுதான் என் வேலை. என்னை பொறுத்தமட்டில் மோடியின் மதிப்பு முக்கியம் அல்ல. சர்வதேச பார்வையுடன், வளர்ச்சிக்கான இந்தியாவின் அணுகுமுறையைத்தான் நான் பின்பற்றுகிறேன்.

விமான நிலையங்கள் கட்டுவதில் உள்ள வேகத்தையும், கவனத்தையும், நாங்கள் கழிவறை கட்டுவதிலும் காட்டுவோம்.

அன்னிய நேரடி முதலீடுகளை கவர்வதில் எனது அரசு வெற்றி கண்டுள்ளது. ஆனால் அதையும் தாண்டி எல்லாவற்றிலும் வெற்றிகளை பெறுவதுதான் எங்கள் நோக்கம்.

அரசின் பல சீர்திருத்தங்கள், நிர்வாக சீர்திருத்தங்களாகவும் அமைந்துள்ளன. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், திவால் சட்டம் அவற்றில் அடங்கும். சுற்றுச்சூழல் அனுமதி தொடங்கி வருமான வரி நிர்வாகம் வரையில் மின்னணு நிர்வாகத்துக்கு கொஞ்சம், கொஞ்சமாக மாறி வரு கிறோம். எல்லாவற்றையும் உள்ளடக்கிய வளர்ச்சி எங்களுக்கு முக்கியம். அதற்கேற்பத்தான் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்படுகின்றன.

எங்கள் அரசு பூமியில் கால்களை நன்றாக பதித்திருக்கிறது. ஆனால் அதன் கண்கள், சர்வதேச தரத்தை நோக்கியே இருக்கிறது.

உத்தரபிரதேசத்தை பொறுத்தமட்டில் அந்த மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்வதுதான் எங்கள் திட்டம். அதற்காகத்தான் அந்த மாநிலத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான திட்டங்களை அறிவித்திருக்கிறோம்.

உத்தரபிரதேசம் 2014-15-ம் ஆண்டில் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கடைசியில் இருந்தது. திட்டங்கள் மக்களை சென்றடைதல், உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், செயலாக்க முடிவுகள் என்ற நான்கு அம்சங்களின் அடிப்படையில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம், இவற்றில் உத்தரபிரதேசம் மோசமான வடிவில் இருக்கிறது என்பதுதான்.

உத்தரபிரதேச மாநிலம் முன்னேற்றம் காண்பதற்கு பாரதீய ஜனதா மட்டுமே உறுதி அளிக்க முடியும்.

நாட்டு நலனின் அடிப்படையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், அரசுடன் ஒத்துழைத்து வருகின்றன. ஒரே ஒரு கட்சி மட்டும், நாட்டின் முன்னேற்றத்தை பற்றி கவலைப்படாமல் (காங்கிரஸ்) எதிர்ப்பு அணுகுமுறையை ஒவ்வொரு விஷயத்திலும் கடைப்பிடித்து வருகிறது.

தோல்வியின் யதார்த்தத்தை ஒரே ஒரு கட்சி மட்டும் உணர்ந்து நடப்பதில்லை என்பதை ஒட்டுமொத்த நாடு அறியும்.

ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவைகள் சட்டத்தை பொறுத்தமட்டில், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் பெரும் பலன்களை அடையும். எனவே ஜி.எஸ்.டி. சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த அரசியல் கட்சியும் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் என்று நான் கருதவில்லை.

நான் ஒரு நம்பிக்கைவாதி. அந்த வகையில், மரண பாதையை விட வாழ்வுப்பாதையைத்தான் அதிகமாய் நம்புகிறேன்.

சமீப காலத்தில் தேர்தல்களில் பண பலம் என்பது முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. தேர்தல்களின்போது அரசின் பணி, ஸ்தம்பித்து போகிறது.

எனவேதான் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பல தரப்பினரும் கூறி வருகின்றனர். இது நடந்துவிட்டால், டெல்லி மேல்-சபை செயல்பாடுகளும் மாறும்.

இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →