மியான்மரில் 50 ஆண்டுகளாக சர்வாதிகாரியாக இருந்தவர் புத்த துறவி ஆனார்.
மியான்மரில் கடந்த 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடந்தது. சமீபத்தில் தான் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்து ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அங்கு ஆங் சான்– சூகியின் தலைமையிலான ஜனநாயக கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இறுதியாக ராணுவ ஆட்சியாளராக அதாவது சர்வாதிகாரியாக தெய்ன் செயின் பதவி வகித்தார். 5 ஆண்டுகள் இவர் பதவியில் இருந்தார். அப்போது தான் அங்கு சட்ட சீரமைப்பு பணிகள் நடந்து ஜனநாயக ஆட்சிக்கு வழிவகை செய்யப்பட்டது.
தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் 5 நாட்களுக்கு மட்டும் புத்த துறவி ஆகியுள்ளார். நேற்று முன்தினம் அவர் பியின் ஆல்வின் நகரில் உள்ள புத்த மடத்துக்கு சென்றார். அங்கு புத்த பிட்சு உடையணிந்து துறவி ஆக மாறினார்.
புத்த துறவி ஆக இருக்கும் கோலத்தில் தியான பயிற்சி மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். ராணுவ ஆட்சியில் நாட்டின் அதிபர் பதவி வகித்த போது புத்த துறவி ஆக விரும்பியதாகவும் அதை தற்போது நிறைவேற்றி கொண்டதாகவும் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.